• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் டைட்டில் வின்னரை மறுமணம் செய்யப்போகிறாரா நடிகை மேக்னா ராஜ்?

பிக் பாஸ் டைட்டில் வின்னரை மறுமணம் செய்யப்போகிறாரா நடிகை மேக்னா ராஜ்?

குழந்தையுடன் மேகனா

குழந்தையுடன் மேகனா

குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

  • Share this:
    நடிகை மேக்னா ராஜ், பிக் பாஸ் பிரபலத்தை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக வதந்தி கிளம்பியுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி, பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா தனது கர்ப்பிணி மனைவி மேக்னா ராஜ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை தவிக்க விட்டு விட்டு மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சிரஞ்சீவியின் மனைவியும், நடிகையுமான மேக்னா தனது முதல் குழந்தையை வரவேற்க ஆவலுடன் தயாராகி வந்தார். அந்த நேரத்தில் நிகழ்ந்த சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் முழு குடும்பத்தையும் விரக்தியில் தள்ளியது. இதையடுத்து மேக்னாவுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா எனப் பெயரிடப்பட்டது. குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    இந்நிலையில் மேக்னா இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், பிக் பாஸ் 4 கன்னட டைட்டில் வின்னர் பிரதாமை தனது வருங்கால கணவராக தேர்ந்தெடுத்ததாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு பிரதம் தனது சமூக ஊடகங்களில் பதிலளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Is Meghana Raj all set to marry Kannada Bigg Boss title winner Pratham, meghana raj, meghana raj instagram, meghana raj baby, meghana raj delivery, meghana raj date of birth, meghana raj son, meghana raj marriage, meghana raj phone number, meghana raj twitter, bigg boss pratham, bigg boss pratham wife name, bigg boss pratham movie, kannada bigg boss pratham, olle huduga pratham, bigg boss pratham contact number, pratham bigg boss winner cast, மேக்னா ராஜ், நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம், பிக் பாஸ் பிரதாம்
    பிரதாம்




    சமூக வலைதளத்தில் கன்னட மொழியில் இது குறித்து ட்வீட் செய்துள்ள பிரதாம், "நான் இதை புறக்கணிக்க நினைத்தேன்!! ஆனால் இந்த செய்தி 2.70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. யூடியூப் சேனல்கள் பார்வைகள் மற்றும் பணத்திற்காக தரம் குறைவாக இருக்கும்போது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நினைக்கிறேன். இதுபோன்ற வீடியோக்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்போது மற்ற சேனல்களுக்கு அது ஒரு பாடமாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: