முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bharathi Kannamma: ’பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகும் வெண்பா?

Bharathi Kannamma: ’பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகும் வெண்பா?

ஃபரீனா அசாத்

ஃபரீனா அசாத்

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைத் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் வெண்பா கர்ப்பமானதைத் தொடர்ந்து அந்த சீரியலில் இருந்து விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் சமீப நாட்களில் அதிக விறுவிறுப்புடன், ரசிகர்களிடம் மிக பிரபலமாகியிருக்கிறது. இதில் டாக்டர் வெண்பா என்ற வேடத்தில் நடிக்கும் ஃபரினா ஆசாத், ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும், தான் விரும்பும் பாரதியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல வில்லத்தனங்களை செய்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைத் தெரிவித்தார். முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவர், தனது கர்ப்ப கால புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது உடல்நிலையைக் கவனித்துக் கொள்வதற்காக, ஃபரீனா சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு பதிலளித்த ஃபரீனா, "நான் சீரியலை தொடராமல் போனால், வெண்பாவின் கதாபாத்திரம் மாறுமா என்று பலர் என்னிடம் கேட்டார்கள். வெண்பா கதாபாத்திரம் தொடரும், அதனால் ஃபரீனாவும்... கவலைப்பட வேண்டாம், என்னால் முடிந்தவரை சீரியலில் தொடர்ந்து பணியாற்றுவேன். எனது ரசிகர்களை மகிழ்விப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருக்கிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv