பிக்பாஸ் வீட்டின் 17-வது போட்டியாளரா ஆல்யா மானசா?

news18
Updated: July 20, 2019, 1:28 PM IST
பிக்பாஸ் வீட்டின் 17-வது போட்டியாளரா ஆல்யா மானசா?
நடிகை ஆல்யா மானசா
news18
Updated: July 20, 2019, 1:28 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் ஆல்யா மானசா பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் துவங்கி 26 நாட்களை கடந்துள்ளது. ஆரம்பத்தில் 15 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி துவங்கியது. 16-வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

இதையடுத்து இரண்டாவது வாரத்தில் பாத்திமா பாபு முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து 2-வது நபராக வனிதா வெளியேறினார். இந்த வார இறுதியில் ஒருவர் வெளியேற்றப்பட இருக்கிறார். இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கை 13 பேராக குறையும்.


இதைத்தொடர்ந்து நடிகை ஆல்யா மானசா  பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது நடிகை ஆல்யா மானஷா தனது காதலருடன் மாலத்தீவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதற்கான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், சுற்றுப்பயணம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் சில நாட்கள் அவர் மாலத்தீவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளதால் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.Loading...

 
View this post on Instagram
 

🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳Such a great experience🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳..thank you @touronholidays for the best trip #maldives #maldivesislands #ayadamaldives


A post shared by Alya Manasa (@alya_manasa) on


இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற்றப்பட்ட பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்ல இருக்கும் நபர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.

பார்க்க: ஹாப்பி பர்த்டே ஷாக்‌ஷி அகர்வால்...!

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...