தொழில்நுட்ப அடிப்படையிலான குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் த்ரில்லர் திரைக்கதையான சைபர் வார் வெப் சீரிஸை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்புகிறது.
சைபர் நிபுணர்கள் குழு மும்பை நகரத்தில் உள்ள குற்றவாளிகள் மூலம் நடைபெறும் சைபர் கிரைம் வலையமைப்பைக் கைப்பற்றும் பணியைத் தொடங்கும்போது மும்பை காவல்துறையை தாக்கி அழிக்கும் நோக்குடன் அடுத்து என்ன நடக்கும் என விறுவிறுப்பான கதைகளத்தை கொண்டுள்ளது.
1. தொழில்நுட்ப கதைக்களம்: நிறைய தொழில்நுட்ப வளர்ச்சி அடிப்படையிலான தொழில்நுட்ப விதிமுறைகள், தொழில் தளங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தகவல் மற்றும் கலந்துரையாடலை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் புதுவித அனுபவத்தை உண்டாக்கும்.
2. சுவாரஸ்யமான வழக்குகள்: இத்திரைக்கதை மக்களுக்கு பல திருப்பங்கள் நிறைந்த பல்வேறு வழக்குகள் சம்பந்தப்பட்ட விவரங்களை தெரிவிப்பதால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கதையாகும்.
3. கணிக்க முடியாத கதைதளம்: இந்த கதையில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளை பார்வையாளர்களை கணிக்க முடியாத நிலையில் கொண்டு செல்கிறது.
4. அருமையான வசனங்கள்: கதையின் விசாரணை உரையாடல்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டு பார்வையாளர்களை தன்வசம் ஈர்க்கிறது.
5. நடிப்பின் வெளிப்பாடு: முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மோகித் மாலிக் மற்றும் சானியா இரானி இருவரும் திரைக்கதையில் அற்புதமான தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் வெப் சீரிஸில் அடுத்து அடுத்த நிகழ்வுகள் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது.
ஒரு புதிரான விறுவிறுப்பான த்ரில்லர் பயணத்தை அனுபவிக்க சைபர் வார் வெப் சீரிஸை தினமும் இரவு 8:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் காணலாம். மேலும் எந்நேரத்திலும் காண voot App- ஐ ட்யூன் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.