ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Bigg Boss Tamil 6: பிரபல மாலில் கேட்ட பிக் பாஸ் குரல்... ஆச்சர்யமடைந்த மக்கள்!

Bigg Boss Tamil 6: பிரபல மாலில் கேட்ட பிக் பாஸ் குரல்... ஆச்சர்யமடைந்த மக்கள்!

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

6 சீசன்களில் முதன்முறையாக பிக் பாஸின் குரல் வீட்டிற்கு வெளியே கேட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக விளம்பரப்படுத்தியிருக்கிறது விஜய் தொலைக்காட்சி.

    உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த ஞாயிற்றுக் கிழமை விஜய் டிவி-யில் தொடங்கியது. கடந்த ஐந்து சீசன்களை வெற்றிகரமாக கடந்த இந்நிகழ்ச்சி தற்போது 6-வது முறை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒளிபரப்பட்டு வருகிறது. விஜய் டிவி-யை தவிர, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் ஒரு பெரிய விளம்பர பிரச்சாரத்தை மென்னெடுத்துள்ளது விஜய் டிவி.

    அந்த வகையில் 6 அடி உயர கண்களைக் கவரும் பிக் பாஸ் 6 கண் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது. கண்ணின் மையப் பகுதியில் உள்ள கேமரா, பக்கத்தில் உள்ள எல்இடி டிவியுடன் இணைக்கப்பட்டது. ஆகவே பார்வையாளர்கள் திரையில் தங்களைப் பார்த்து மகிழ்ந்தனர்.

    ' isDesktop="true" id="817939" youtubeid="hz4HjtQ2oj8" category="television">

    ' isDesktop="true" id="817939" youtubeid="RjKWjLzGOZ0" category="television">

    6 சீசன்களில் முதன்முறையாக பிக் பாஸின் குரல் வீட்டிற்கு வெளியே கேட்டது. ஃபோரம் விஜயா மாலின் நடுவில் பிக் பாஸ் குரலை கேட்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். அங்கு அவர் பார்வையாளர்களிடம் சில டாஸ்க்குகளைக் கொடுத்து செய்யச் சொன்னார். இதனால் அங்கு வந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 6