• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சர்வைவர் எலிமினேஷனுக்குப் பிறகு இந்திரஜா சங்கர் வெளியிட்ட உருக்கமான பதிவு!

சர்வைவர் எலிமினேஷனுக்குப் பிறகு இந்திரஜா சங்கர் வெளியிட்ட உருக்கமான பதிவு!

இந்திரஜா சங்கர்

இந்திரஜா சங்கர்

அர்ஜூன், 3வது உலகத்தைப் பற்றி கூறியது மீண்டும் போட்டியில் தொடரப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அங்கு சென்றனர்.

  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் ஷோவில் இருந்து இந்த வாரம் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் எலிமினேட் ஆகியுள்ளார்.

உலகளவில் மெகா ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோவான ‘சர்வைவர்’ தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்க வெள்ளித்திரை பிரபலங்களான விக்ராந்த், நந்தா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். முதல் எலிமினேஷனில் சிருஷ்டி வெளியேற, இந்த வாரம் எலிமினேஷனில் இந்திரஜா சங்கர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

முதல் வாரமே எலிமினேஷனில் இந்திரஜா வந்தாலும், ஜஸ்ட் மிஸ்ஸில் போட்டியில் தொடர்ந்தார். ஆனால், அவருடைய துருதிஷ்டவசமாக இந்த வாரம் அவரால் போட்டியில் தொடர முடியவில்லை. வழக்கம்போல் முறையாக பங்களிப்பு செலுத்தாதவர்களை சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். அந்தவகையில், இந்தவாரம் காயத்திரி, பார்வதி, இந்திரஜா ஆகியோர் 3வது உலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Also read... அக்ஷரா ரெட்டி முதல் கோபிநாத் ரவி வரை - பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் விவரம்!

ஏற்கனவே 3வது உலகத்தில் இருந்த இந்திரஜாவுடன் முதலில் காயத்திரி சேர்ந்துகொண்டார். கடைசியாக பார்வதி இணைந்தார். சக போட்டியாளர்களால் எலிமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழுமையாக சர்வைவர் ஷோவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டோம் என காய்த்திரியும், பார்வதியும் நினைத்தனர். அவர்களுக்கு 3வது உலகம் என்ற ஒரு வாய்ப்பு இருப்பது தெரியாது.

அர்ஜூன், 3வது உலகத்தைப் பற்றி கூறியது மீண்டும் போட்டியில் தொடரப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அங்கு சென்றனர். அங்கு போட்டியில் இருந்து ஒருவரை வெளியேற்றுவதற்கான படலம் தொடங்கியது அதிர்ஷ்டக்காற்று பார்வதிக்கு வீசியது. அதாவது, கல் ஜோசியத்தில் 3 கற்களும் ஒரே மாதிரியாக பார்வதிக்கு வந்ததால், எலிமினேஷன் போட்டியில் அவர் கலந்து கொள்ளத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. 
View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)


இதனால் பார்வதி மகிழ்ச்சியில் இருக்க, போட்டியில் தொடர வேண்டும் என்ற நிலையில் காய்த்திரியும் இந்திரஜாவும் போட்டிப் போட்டனர். கயிறு வலைக்குள் இருந்த கியூப்களை முறையாக அடுக்கி காயத்திரி வெற்றி பெற்றார். இந்திரஜா சங்கர் வேறு வழியின்றி போட்டியில் இருந்து வெளியேற நேர்ந்தது. இந்நிலையில், சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் அவர். அதில், நான் சர்வைவரில் இருந்தபோது கிடைத்த உங்கள் அன்பு மற்றும் ஆதரவிற்கு மிக்க நன்றி. நீங்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. என்னை பற்றி நானே அறிந்துகொள்ளும் இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்த ஜீ தமிழ் மற்றும் சர்வைவர் டீமுக்கு நன்றி."

"அர்ஜுன் சாருக்கு நன்றி. அவர் என்னை சிறப்பாக வழிநடத்தினார். சக போட்டியாளர்களுக்கு என இதயபூர்வமான நன்றி. நீங்கள் எனக்கு ப்ளஸ் மைனஸ் என எல்லாவற்றையும் கற்றுத்தந்தீர்கள். என் பின்னால் எப்போதும் நிற்கும் குடும்பத்திற்கும் நன்றி. குடும்பத்தோட அருமை தெரியணும்னா சர்வைவர் ஷோ போயிட்டு வாங்க" என அவர் கூறி இருக்கிறார். இந்திரஜாவின் பாசிட்டிவான இந்த பதிவைப் பார்த்து பலரும் அவருக்கு பாராட்டுகளையும், அன்பையும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: