Serial Actor Indira Kumar: தமிழ் சீரியல் நடிகர் இந்திர குமார் தற்கொலை

Serial Actor Indira Kumar: தமிழ் சீரியல் நடிகர் இந்திர குமார் தற்கொலை

சீரியல் நடிகர் தற்கொலை

முந்தைய நாள் இரவு நண்பர்களுடன் இணைந்து ஒரு திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார்.

  • Share this:
    சமீபமாக திரையுலகம் தற்கொலையால் பல திறமையாளர்களை இழந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் கூட சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர் தற்கொலை செய்துக் கொண்டது, ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

    இப்போது, தமிழ் தொலைக்காட்சி நடிகர் இந்திர குமாரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சென்னையிலுள்ள தனது நண்பரின் வீட்டில் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிகிறது.

    ’உங்கள் உதட்டை கடிக்க வேண்டும்’ என்ற பிரபலத்திற்கு நடிகை கூறிய பதில்!

    தகவல்களின்படி, இந்திர குமார் தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார், அங்கு முந்தைய நாள் இரவு நண்பர்களுடன் இணைந்து ஒரு திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார். பின்னர், அறைக்குள் சென்ற அவர் காலையில் வெளியே வரவில்லை. அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காத நிலையில், நண்பர்கள் அறைக்குச் சென்றபோது, இந்திர குமார் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

    அவரது மர்மமான மரணம் குறித்து போலீஸார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இந்திரா குமார் குடும்ப பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவர் படங்களில் நடிக்க விரும்பியதாகவும், வாய்ப்புகள் கிடைக்காத வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: