• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி டிடி மீது செருப்பு வீச்சு... வைரலாகும் வீடியோ

விஜய் டிவி டிடி மீது செருப்பு வீச்சு... வைரலாகும் வீடியோ

விஜய் டிவி டிடி

விஜய் டிவி டிடி

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் டிடி.

  • Share this:
    நடனமாடிக் கொண்டிருக்கும் தன் மீது செருப்பை வீசும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் விஜய் டிவி டிடி.

    நீண்ட காலமாக விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி. ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதோடு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

    ஜய் டிவி-யில் இருக்கும் ஆங்கர்களில் சின்னத்திரை ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் டிடி. அதோடு புதிதாக தொலைக்காட்சிக்கு வரும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார். சென்னையில் பிறந்த இவர் கிங்ஸ்ஃபோர்ட் கான்வென்ட் மற்றும் சி.எஸ்.ஐ ஜெஸ்ஸி மோசஸ் ஹயர் செகண்டரி ஸ்கூலில் பள்ளி படிப்பை நிறைவு செய்தார்.

    பின்னர் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து ட்ராவல் அண்ட் டூரிஸம் மேனேஜ்மென்டில் எம்.பில் பட்டம் பெற்றார். சின்னத்திரை மட்டுமின்றி சில தமிழ் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டிடி.




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் டிடி. நடனமாடும் டிடி மீது விளையாட்டாய் யாரோ செருப்பை வீசுகிறார்கள். இதற்கு, “விநாயகர் சதுர்த்திக்கு ஒரு ரீல் போடலாம்ன்னு நினச்சு, சரி ட்ரெண்டிங் ரீல் ஒண்ணு ட்ரை பண்ணேன், எங்க வீட்டு ரியாக்ஷன் இதான் அதுக்கு... பாத்து சிரிச்சுட்டு போங்க... செம்ம அடி...” என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: