ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிச்சன் சண்டை.. 'நீங்க பிக்பாஸ் இல்லை..' மகேஷ்வரியிடம் கடுப்பைக் காட்டிய அசீம்!

கிச்சன் சண்டை.. 'நீங்க பிக்பாஸ் இல்லை..' மகேஷ்வரியிடம் கடுப்பைக் காட்டிய அசீம்!

அசீம் மற்றும் மகேஷ்வரி

அசீம் மற்றும் மகேஷ்வரி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இரண்டாவது நாளான நேற்று கிச்சனில் அசீம் டீ போட சென்ற போது அவருக்கும் கிச்சன் டீமில் உள்ள மகேஷ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் நீங்க ஒன்னும் பிக்பாஸ் இல்லை என்று மகேஷ்வரியிடம் அசீம் கடுமையாக பேசியுள்ளார்.

சின்னத்திரையில் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இரண்டாவது நாளான நேற்று கிச்சனில் அசீம் டீ போட சென்ற போது அவருக்கும் கிச்சன் டீமில் உள்ள மகேஷ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மகேஷ்வரி அசீமிடம் டீ வேண்டும் என்றால் கிச்சன் டீமில் இருக்கவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று கூற அசீம் சரி எனக்கு ஒரு பால் டீ வேண்டும் என்று கூறினார்.

அதற்கு மகேஷ்வரி வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மெட்களிடமும் கேளுங்கள் என்று கூற, அசீம் எனக்கு தேவையானதைதான் நான் சொல்ல முடியும் என்று கூறுகிறார். அதற்கு மகேஷ்வரியும், சாந்தியும் பால் டீ காலையும் மாலையுதான் கொடுக்க முடியும் ரேஷன் பிரச்னை ஏற்படும் என்று கூறுகின்றனர்.

Also read... கன்னட சினிமாவின் முகத்தை மாற்றிய மூன்று ஷெட்டிகள்

அதற்கு கடுப்பான அசீம் எனக்கு எப்போ டீ குடிக்கனும்னு தோனுதோ அப்போதான் குடிக்க முடியும் நீங்க சொல்ற நேரத்துக்கு குடிக்க முடியாது, இதெல்லாம் சொல்லுறதுக்கு நீங்க பிக்பாஸ் இல்லை என்றும் கடுப்பாக கூறினார்.

நிகழ்ச்சியின் இடையில் தொடர்ந்து பேசிய மகேஷ்வரியும் அசீமும் நான் உங்களை காயப்படுத்தவேண்டும் என்று பேசவில்லை என்று கூறி மாறிமாறி சாரி சொல்லிக்கொண்டு இனி நாம் நண்பர்கள் எந்த பிரச்னை வந்தாலும் பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் அசீம் மகேஷ்வரியிடம் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6