Home /News /entertainment /

இமானின் முன்னாள் மனைவி அந்த சர்ச்சை நிகழ்ச்சிக்கு செல்கிறாரா?

இமானின் முன்னாள் மனைவி அந்த சர்ச்சை நிகழ்ச்சிக்கு செல்கிறாரா?

இமான் முதல் மனைவி

இமான் முதல் மனைவி

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள்  பலரும் பலவிதமான சர்ச்சையில் சிக்கி கொள்வார்கள்.

    இசையமைப்பாளர் டி.இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் சின்னத்திரையின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக செல்ல இருப்பதாக இணையத்தில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. கடந்த 2 நாட்களாக இந்த தகவல் இணையத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசையமைப்பாளர் டி.இமான் . இவருக்கு ஏற்கெனவே
    மோனிகா ரிச்சர்ட் என்பவருடன் திருமணம் ஆகி இந்த ஜோடிக்கு வெரோனிகா, பிளெஸிகா என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே கடந்த வருடம் இமான் - மோனிகா இருவரும் விவாகரத்து பெற்றனர்.மனதளவில் இருவரும் 2 வருடமாக பிரிந்து தான் வாழ்ந்து இருக்கிறார்கள். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை சட்டபபூர்வமாக பிரிந்து விட்டதாக இமான் இணையத்தில் பதிவு செய்து இருந்தார். இது ரசிகர்களுக்கும் சரி, திரைத்துறையை  சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இதையும் படிங்க..எனக்கு அமீரை பிடிக்கும்.. மேடையில் போட்டுடைத்த பிக் பாஸ் பாவ்னி!

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமலி உபால்டு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் இமான். இதைத்தொடர்ந்து தனது மறுமணம் குறித்து முகநூலில் பதிவிட்ட டி.இமான், தனது இரண்டு மகள்களுக்காக காத்திருப்பதாக உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், இமானின் திருமணத்தை விமர்சிக்கும் வகையில் அவரின் முதல் மனைவி ரிச்சர்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    அதில்,“டியர் டி.இமான், உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் 12 வருடம் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய தவறு” என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலானது. இப்படி இருக்கையில், ரிச்சர்ட் கூடிய விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் சீசன்6ல் போட்டியாளராக களம் இறங்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.

    தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு பெயர் போனது.  அதே போல் சிலர் புகழின் உச்சிக்கும் சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் அதில் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் கலந்து கொள்ள இருப்பதாக சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி உலா வருகிறது. ஆனால் இதுக் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை, மோனிகாவும் இதுக் குறித்து பதில் எதுவும் பதிவு செய்யவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி