• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இமான் அண்ணாச்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இமான் அண்ணாச்சி!

இமான் அண்ணாச்சி

இமான் அண்ணாச்சி

தொலைக்காட்சி பிரபலம் இமான் அண்ணாச்சி, பிக் பாஸ் போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தொலைக்காட்சி பிரபலம் இமான் அண்ணாச்சி களம் கண்டுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.



    இதைத் தொடர்ந்து தொலைக்காட்சி பிரபலம் இமான் அண்ணாச்சி, போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். நிகழ்ச்சியில் குட்டீஸ்களை கையாள்வதைப் போல, பிக் பாஸ் வீட்டிலுள்ள குட்டீஸ்களையும் கையாளுவேன் என மேடையில் குறிப்பிட்டார் அண்ணாச்சி. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் ஹாசனை வரவேற்று அழகாக ஆங்கரிங் செய்து அசத்தினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: