• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெற்றிகரமாக 700 எபிசோட்களை கடந்த இதயத்தை திருடாதே சீரியல் - ரசிகர்களுக்கு நன்றி!

வெற்றிகரமாக 700 எபிசோட்களை கடந்த இதயத்தை திருடாதே சீரியல் - ரசிகர்களுக்கு நன்றி!

இதயத்தை திருடாதே

இதயத்தை திருடாதே

பெரிய ரவுடியாக வலம் வரும் சிவாவை பற்றிய தகவல் தங்களுக்கு பிறந்த மகளுக்கு தெரிந்து விட கூடாது என்று கண்ணும் கருத்துமாக மகளை வளர்த்து வருகிறார் தொழிலதிபராக இருக்கும் சஹானா.

  • Share this:
சின்னத்திரை ரசிகர்களை பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தன் சேனல் பக்கம் ஈர்த்து வருகிறது கலர்ஸ் தமிழ். மற்ற சேனல்களை போல கலர்ஸ் தமிழிலும் மக்களை மகிழ்விக்க பல் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் இதயத்தை திருடாதே சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த சீரியலாக இருந்து வருகிறது. கடந்தாண்டு பிப்ரவரி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இதயத்தை திருடாதே இரண்டாம் அத்தியாயம் என்ற பெயரில் இந்த சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் நாயகியாக நடிகை ஹிமா பிந்து, சஹானாவாக நடித்து வருகிறார். நடிகர் நவீன் குமார், சிவா என்ற கேரக்டரில் நடிக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக `திருமணம்' என்ற பெயரில் இருவரின் வாழ்க்கை பகடைக்காயாக்கப்படும் கதையாக இந்த சீரியலின் முதல் அத்தியாயம் ஒளிபரப்பானது. அத்தியாயம் ஒன்றின் நிறைவில் சிவாவை போலீஸ் கைது சென்று கூட்டி செல்வதை போல காட்டப்பட்ட நிலையில், அதிலிருந்து 6 வருடங்களுக்கு பிறகான கதை இதயத்தை திருடாதே அத்தியாயம் இரண்டு என்ற பெயரில் தற்போது தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெரிய ரவுடியாக வலம் வரும் சிவாவை பற்றிய தகவல் தங்களுக்கு பிறந்த மகளுக்கு தெரிந்து விட கூடாது என்று கண்ணும் கருத்துமாக மகளை வளர்த்து வருகிறார் தொழிலதிபராக இருக்கும் சஹானா. ஆனால் தந்தையை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மட்டுமே நேரத்தை செலவழிக்கிறாள் அவரது மகள். அத்தியாயம் இரண்டு இவ்வாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களின் பேராதரவுடன் தற்போது 700 எபிசோட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது இதயத்தை திருடாதே சீரியல்.

இதற்காக இந்த பிரபல காதல் சீரியலில் நடிக்கும் நடிகர் நவீன்குமார் மற்றும் நடிகை ஹிமா பிந்து ஆகியோர் சோஷியல் மீடியா மூலம் ரசிகர்கள் மற்றும் சீரியல் குழுவினருக்கு தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டுள்ளனர். மேலும் ஸ்பெஷல் கேக் கட்டிங் நிகழ்வு மூலம் இந்த சிறப்பான தருணத்தை இதயத்தை திருடாதே டீம் கொண்டாடி மகிழ்ந்துள்ளது. 
View this post on Instagram

 

A post shared by HB (@himabindhu____)


மரியான் திரைப்படத்தின் பாடலான "நேற்று அவள் இருந்தால்"பாடல் வரிகளை பின்னணியில் ஒலிக்கவிட்டு நடிகை ஹிமா பிந்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார். இந்த விடியோவை ஷேர் செய்துள்ள ஹிமா, " நாங்கள் 700 எபிசோடை எட்டியுள்ளோம், இதுவரை ஒரு உற்சாக பயணமாக இருக்கிறது. இந்த பயணம் நிறைய போராட்டங்கள் மற்றும் வியர்வையுடன் கூடிய ஒன்று. இது என் கனவை சாத்தியமாக்கி இருக்கிறது.

Also read... வரி விலக்குக்கோரிய நடிகர் சூர்யா... மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

என் கனவை சாத்தியமாக்க வாய்ப்பளித்த எனது தயாரிப்பாளர், இயக்குனர், இணை நடிகர்கள் மற்றும் மற்றும் குழுவினர் என அனைவருக்கும் நன்றி. தொடர்ச்சியான ஆதரவு மற்றும் அன்புடன் என் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் பார்வையாளர்களின் சப்போர்ட்டை நான் என்றும் மறக்க மாட்டேன். IT1 மற்றும் IT2-க்கான உங்கள் ஆதரவுக்கு நன்றி. நிறைய அன்பு மற்றும் சிறப்பாக முயற்சி செய்வதாக உறுதியளித்தார். பாராட்டுக்கு அடையாளமாக இந்த வீடியோவை கண்டு மகிழுங்கள் என்று கூறி இருக்கிறார். 
View this post on Instagram

 

A post shared by J.NAVIN KUMAR (@navinactor_official)


இதே போல நடிகர் நவீன் குமார் தனது இன்ஸ்டாவில், "எனது கடின உழைப்பை அங்கீகரித்ததற்கும், நான் ஒரு புதிய கேரக்டரை திறம்பட செய்வேன் என்று நம்பியதற்கு "இதயத்தை திருடாதே" குழுவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உலகம் முழுவதும் எனக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை எனக்கு உணர்த்திய என் ரசிகர்களுக்கு மிகவும் அன்பான அரவணைப்புகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: