இதயத்தை திருடாதே சீரியலின் ‘தீரா கனா’ பாடல் வீடியோ

இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள ‘தீரா கனா’ பாடல் வீடியோ யூடியூபில் ஹிட் அடித்து வருகிறது.

  • Share this:
தமயந்தி எழுத்தில் ராதாகிருஷ்ணன் (ஆர்.கே) இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்திலிருந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் இதயத்தை திருடாதே. இத்தொடர் மராத்தி மொழி சீரியலின் ரீமேக்.

நவீன் குமார், பிந்து ஹிமா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்தொடரில் சிவ கவிதா, அசோக், கார்த்திகா, ஆனந்தன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இதயத்தை திருடாதே சீரியல் குழுவினருடன் நவராத்திரி கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்.
மேலும் கலர்ஸ் தமிழ் டிவி இதயத்தைத் திருடாதே தொடருக்கென பிரத்யேக பாடலையும் உருவாக்கியுள்ளது. தமயந்தி எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு சுதர்ஷன் இசையமைத்துள்ளார். பின்னணி பாடகி பிரியங்கா இந்தப் பாடலை பாடியுள்ளார். கலர்ஸ் தமிழின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: October 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading