Home /News /entertainment /

என்ன நியூஸ் அது? ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் சிவா - சஹானா ஃபேன்ஸ்!

என்ன நியூஸ் அது? ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் சிவா - சஹானா ஃபேன்ஸ்!

சிவா சஹானா

சிவா சஹானா

இதயத்தை திருடாதே சீரியலில் சிவா கேரகடரில் நடிக்கும் நடிகர் நவீன் குமார் சீரியலை விட்டு விலக போவதாக தகவல் வெளியாகியது

  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இது கலர்ஸ் மராத்தி தொடரான 'ஜிவ் ஜலா ஏடே பிசா' என்ற தொடரின் ரீமேக் ஆகும்.  இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஜோடியாக வலம் வருகிறார்கள் சிவா - சஹானா. இந்த ஜோடிகளுக்கு சீரியல் மூலம் கிடைத்திருக்கும் ரீச் அனைவராலும் கவனிக்கப்படுகிறது. இவர்களின் நடிப்பில் முதல் சீசன் நிறைவடைந்தை தொடர்ந்து, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2 ஆவது பாகமும் தற்போது ஒளிப்பரப்பட்டு வருகிறது.

  நடிகை ஹிமா பிந்து, சஹானா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் நவீன் குமார், சிவா என்ற கேரக்டரில் நடிக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக `திருமணம்' என்ற பெயரில் இருவரின் வாழ்க்கை பகடைக்காயாக்கப்படுவதும் அதன் விளைவாக ஏற்படும் சம்பவங்களும் இந்த சீரியலின் முதல் அத்தியாயத்தின் கதையாக ஒளிபரப்பானது. இரண்டாவது அத்தியாயம் சில வருடங்களுக்கு பின்னர் நடக்கும் கதையாக தொடர்கிறது. சஹானா - சிவா இவர்களது பெண் குழந்தையான ஐஸ்வர்யா உள்ளிட்டோரை மையமாக வைத்து தற்போது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் பிப்ரவரி 14, 2020 முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இரண்டாம் சீசனோடு சேர்த்து இதயத்தை திருடாதே சீரியல் 1000 எபிசோட்கள் என்ற மைல்கல்லை இரண்டாண்டுகளுக்குள் கடந்து சாதனை படைத்தது உள்ளது.

  இதையும் படிங்க.. வெறும் 5 நிமிடத்தில் சூப்பரான டிபன் ரெடி பண்ணலாம்.. முட்டை, உருளைக்கிழங்கு மட்டும் போதும்!

  இந்த சந்தோஷத்தை போன வாரம் சீரியல் குழு கேக் வெட்டி கொண்டாடியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த சீரியலில் சிவா கேரகடரில் நடிக்கும் நடிகர் நவீன் குமார் சீரியலை விட்டு விலக போவதாக தகவல் வெளியாகியது. இது இதயத்தை திருடாதே சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவரின் ரசிகர்கள் பலரும் இது வெறும் வதந்தி மட்டுமே என்றனர். ஏனென்றால் சிவா ரோலில் நவீனை தவிர வேற யாரையும் ரசிகர்கள் எற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற விஷயம் சீரியல் குழுவுக்கு தெரியும் என்றனர். அப்படி இருக்கையில் தொடர்ந்து சிவாவாக நவீன் சீரியலில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Serials (@tamilserialexpress)


  இந்நிலையில் இன்று நவீன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘எதிர்பாரததை எதிர்பாருங்கள்’ என்ற வரியுடன் ஸ்டேட்ட்ஸ் ஒன்றை வைத்துள்ளார். அது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் காலை முதல் யோசித்து வருகின்றனர். சிலர், சீரியலை விட்டு நவீன் போவதை அதிகாரப்பூர்வமாக சொல்வார் என கணித்துள்ளனர்.இன்னும் சில சீரியல் குறித்த அப்டேட்டாக இருக்கும், அவரே இனிமே சொந்த குரலில் வாய்ஸ் கொடுப்பார் என்கின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், சிவா - சஹானாவும் காதலிப்பதாக சொல்ல போகிறார்கள் என மிகப் பெரிய விஷயத்தை கமெண்டாக பதிவு செய்து வருகின்றனர். என்ன நியூஸ் அது? என்பதை நவீன் சொன்ன பின்பு தான்  இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

  அடுத்த செய்தி