• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மழை... இடி.. சென்னை வெள்ளத்தை கண்முன் நிறுத்த உழைப்பை கொட்டும் சீரியல் குழு!

மழை... இடி.. சென்னை வெள்ளத்தை கண்முன் நிறுத்த உழைப்பை கொட்டும் சீரியல் குழு!

இதயத்தை திருடாதே

இதயத்தை திருடாதே

சீரியலுக்காக நிஜமாகவே மழை பெய்வது போன்று, வெள்ளம், இடி கிராஃபிக்ஸ் காட்சிகள் என அதிகளவு செலவு செய்தும் காட்சிகளை படமாக்கியுள்ளனர்

  • Share this:
    சின்னத்திரை ரசிகர்களை சீரியல்களால் கட்டி போட்டு வைத்துள்ள கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியல் குழுவின் புது முயற்சி பிரமிக்க வைத்துள்ளது.

    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த சீரியலாக இருந்து வருகிறது. கடந்தாண்டு பிப்ரவரி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று, தற்போது இதயத்தை திருடாதே இரண்டாம் அத்தியாயம் என்று ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியலில் நாயகியாக நடிகை ஹிமா பிந்து சஹானாவாகவும் நடிகர் நவீன் குமார், சிவா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்கள்.

    முதல் அத்தியாயத்தில் சிவாவை போலீஸ் கைது செய்து கூட்டி சென்றனர்.அதிலிருந்து 6 வருடங்களுக்கு பிறகான கதை என்ற பாதையில் இதயத்தை திருடாதே அத்தியாயம் இரண்டு தற்போது தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. சிவாவை பற்றிய தகவல் மகளுக்கு தெரிந்து விட கூடாது என்று மகளை வளர்த்து வருகிறார் தொழிலதிபராக இருக்கும் சஹானா. ஆனால் தந்தையை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மட்டுமே நேரத்தை செலவழிக்கிறாள் அவரது மகள். அத்தியாயம் இரண்டு இவ்வாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த சீரியல் தற்போது 700 எபிசோட்களை கடந்து வெற்றிக்கரமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் தற்போது சீரியலில் சென்னை வெள்ளம் குறித்த காட்சிகள் ஒளிப்பரப்பட்டு வருகின்றன. அதாவது மகளுடன் சஹானா சென்னை வெள்ளத்தில் மாட்டிக் கொள்கிறார். அடுத்த 24 மணி நேரத்திற்கு யாரும் வெளியில் வர கூடாது என அரசாங்கத்தால் எச்சரிக்கை விடப்படுகிறது. மகளின் பாதுகாப்பிற்காக சஹானா சிவாவின் வீட்டில் தங்குகிறார். இதன் தொடர்பான காட்சிகள் தான் தற்போது ஒளிப்பரப்பட்டு வருகிறது. குழந்தைக்காக சஹானா சிவாவிடம் பேசுவது, மூன்று பேரும் சேர்ந்து விளையாடுவது, அப்போது சிவாவுக்கும் சஹானாக்குமான ரொமான்ஸ் காட்சிகள் என கியூட் எபிசோடுகள் அடுத்தடுத்து ஒளிப்பரப்படவுள்ளன.



    இந்த மழை காட்சிகளுக்காக சென்னை வெள்ளத்தை கண்முன் நிறுத்த இதயத்தை திருடாதே படக்குழு தங்களது ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி வருகின்றனர். சீரியலுக்காக நிஜமாகவே மழை பெய்வது போன்று, வெள்ளம், இடி என கிராஃபிக்ஸ் காட்சிகள் என அதிகளவு செலவு செய்தும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுக்குறித்து சீரியல் ஹீரோயின் சஹானாவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லை தொடர்ந்து சீரியலை பார்த்து ஆதரவு தரும்படியும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: