Home /News /entertainment /

படையப்பா படத்தில் வரும் இந்த குழந்தை இன்று பிரபல சீரியல் நடிகை!

படையப்பா படத்தில் வரும் இந்த குழந்தை இன்று பிரபல சீரியல் நடிகை!

படையப்பா

படையப்பா

தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே சினிமா ஆர்டிஸ்டுகள் என்பதால், இயல்பாகவே அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்துவிட்டது.

    ரஜினிகாந்தின் படையப்பா படத்தின் அறிமுகப் பாடலில் வரும் குழந்தை பிரபல முன்னணி சீரியல் நடிகை என்றால் நம்ப முடிகிறதா?

    கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செளந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் படையப்பா. இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், செந்தில், லட்சுமி, ராதாரவி, நாசர், கிரேசி மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

    ரஜினியின் அறிமுகம், ரம்யா கிருஷ்ணனின் வில்லத்தனம், காதல், நகைச்சுவை, பாடல்கள், செண்டிமெண்ட் என அனைத்திலும் பட்டையை கிளப்பிய படையப்பா திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் பலரின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இன்றளவும் இருக்கிறது இந்த படையப்பா படம்.

    இந்தப் படத்தில் ’என் பேரு படையப்பா’ என்ற பாடல், ரஜினியின் அறிமுக பாடலாக இடம்பெற்றிருக்கும். பாடலின் கடைசியில் ‘பாசமுள்ள மனிதரப்பா, நீ மீச வச்ச குழந்தையப்பா’ என்ற வரிகள் வரும் போது திரையில் குழந்தை ஒன்று தோன்றும். அந்த குழந்தை இன்றைய தினத்தில் பிரபல சீரியல் நடிகை என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

    Colors Tamil Idhayathai Thirudathe Hima Bindu in Rajinikanth Padayappa, idhayathai thirudathe hima bindu, idhayathai thirudathe serial, idhayathai thirudathe serial actress, idhayathai thirudathe colors tamil, hima bindu husband name, hima bindu instagram, hima bindu wikipedia, navin kumar and hima bindu, hima bindu family photos, hima bindu family, hima bindu age, hima bindu mother, padayappa full movie tamil, padayappa movie download, padayappa ott, padayappa sun nxt, padayappa full movie tamil mx player, padayappa 2, padayappa netflix, padayappa tamilyogi, ஹிமா பிந்து, படையப்பா, படையப்பா படத்தில் ஹிமா பிந்து, படையப்பா திரைப்படம், இதயத்தை திருடாதே, இதயத்தை திருடாதே ஹிமா பிந்து, ரஜினிகாந்த் படையப்பா
    ஹிமா பிந்து


    விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?

    அவர் வேறு யாருமல்ல, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியல் ஹீரோயின் ஹிமா பிந்து தான். ஆந்திராவைச் சேர்ந்த ஹிமா பிந்து பி.காம் முடித்துள்ளார். தாத்தா, பாட்டி, அப்பா என அனைவருமே சினிமா ஆர்டிஸ்டுகள் என்பதால், இயல்பாகவே அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்துவிட்டது. சிறு வயதில் இருந்தே ஆக்டிங், டான்ஸ் உள்ளிட்டவைகளில் ஆர்வம் காட்டி வந்த ஹிமாவுக்கு, படிக்கும் போதே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வந்துள்ளன. வாய்ப்புகள் தேடி வருவதால் நடிப்பு பக்கம் சென்றுவிடலாம் என அவர் நினைத்தபோது, பெற்றோர்கள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இப்போதைக்கு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்து, படித்து முடித்தபிறகு நடிக்கலாம் என கூறியுள்ளனர்.

    Pandian Stores: முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் - நன்றி சொன்ன குழுவினர்!




    பின்னர் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது அவருக்கு சினிமாவில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை தவற விட வேண்டாம் என நினைத்த ஹிமா பிந்து ’ஐ.ஆர் 8’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு தான் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது அவர் கலர்ஸ் தமிழின் இதயத்தை திருடாதே 2 சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி