கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியல் 2 கூடிய விரைவில் முடிய இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.
கலர்ஸ் மராத்தி தொடரான 'ஜிவ் ஜலா ஏடே பிசா' என்ற தொடரின் ரீமேக் தான் ’
இதயத்தை திருடாதே’ சீரியல். இதன் முதல் பாகம் 2020 ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்தது. சின்ன கேப்புக்கு பிறகு இரண்டாம் பாகத்திற்கான ஒளிபரப்பும் தொடங்கியது. முதல் பாகத்தை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது பாகத்தில் ஹீரோயினாக நடிகை ஹிமா பிந்து, சஹானா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் நவீன் குமார்,
சிவா என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
அத்தியாயம் ஒன்றின் நிறைவில் சிவாவை போலீஸ் கைது செய்து கூட்டி செல்வதை போல காட்டப்பட்ட நிலையில், அதிலிருந்து 6 வருடங்களுக்கு பிறகான கதை இதயத்தை திருடாதே அத்தியாயம் இரண்டு என்ற பெயரில் தற்போது தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு தான் 2வது பாகத்துக்கு காரணம் ஆனது. ஆனால், 3 வது பாகம் வேண்டுமா? என ரசிகர்களிடம் கேட்டால் பெரும்பாலான ரசிகர்கள் வேண்டவே வேண்டாம் என்கின்றனர்.
சண்டையை ஆரம்பித்த ஐஸ்வர்யா - மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடா இது?
அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. கதைப்படி இப்போது சீரியலில் பிரிந்து இருந்த நவீனும் சஹானாவும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் தான் சஹானாவின் அப்பா இறப்பதுபோன்று கதை மாற்றப்பட்டது. சிவா - சஹானா மகளாக ஐஸ்வர்யா என்ற குழந்தையும் உள்ளார். இந்நிலையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த
சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?
கூடிய விரைவில் சிவாவாக நடிக்கும் நவீனுக்கும், செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. சமீபத்தில் தான் இருவரின் நிச்சயதார்த்தமும் முடிந்தது. இந்நிலையில் பல காரணங்களால் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லை, இதயத்தை திருடாதே பாகம் 3, வேண்டுமா? என்ற கேள்வியும் ரசிகர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பெரும்பாலான ரசிகர்கள் வேண்டாம் என்கின்றனர். அதே போல், இந்த சீரியல் முடிந்தால் ஹிமா பிந்து தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அன்பு கோரிக்கையும் ரசிகர்கள் வைத்துள்ளனர். அதே நேரம், நவீன் மீது சில ரசிகர்கள் சின்ன கோபத்தில் இருப்பது போல் தெரிகிறது. அதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் நவீன் - பிந்து ரியல் ஜோடியாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர், அது நடக்காமல் போனதால் ஆதங்கத்தில் இருக்கிறார்களா? என்றும் தெரியவில்லை. இணையத்தில் அதிக இடங்களில் ஹிமாவுக்கு ஆதரவான கருத்துக்களை தான் பார்க்க முடிகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.