’நான் வாயாடி’ - ரெட்டை ரோஜா சீரியல் முத்தழகு சொன்ன சீக்ரெட்ஸ்!

ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ’ரெட்டை ரோஜா’ சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளார் ராஷ்மிதா ரோஜா. ’முத்தழகு’ கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ள அவர், இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ’ரெட்டை ரோஜா’ சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளார் ராஷ்மிதா ரோஜா. ’முத்தழகு’ கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ள அவர், இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ரெட்டை ரோஜா சீரியலில் முத்தழகு கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ள ராஷ்மிதா ரோஜா, நான் ஒரு வாயாடி எனத் தெரிவித்துள்ளார்

  ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ’ரெட்டை ரோஜா’ சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளார் ராஷ்மிதா ரோஜா. ’முத்தழகு’ கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ள அவர், இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், ரெட்டை ரோஜா சீரியலில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  சீரியலில் இணைந்த மகிழ்ச்சியில் தன்னுடைய கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்? என்ற ரகசியத்தையும் வெளிப்படையாக கூறியுள்ளார். முத்தழகு ஒரு வாயாடி பெண். துருதுருவென இருக்கும் அவள், பேசுவதை நிறுத்தவே மாட்டாள். வாயாடி பிள்ளையாக இருப்பாள். இந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்தபோது, முத்தழகு கதாப்பாத்திரத்தை மிகவும் ரசித்தேன். வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த நான் தற்போது முத்தழகாக நடிக்கிறேன் என ராஷ்மிதா ரோஜா கூறியுள்ளார். அதுமட்டுமில்லாது, முத்தழகு என்ன செய்யப்போகிறாள்? எனவும் கூறியுள்ளார்.
  கதைப்படி, அக்ஷய் கமலாக நடிக்கும் சஞ்சீவுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கும் அவர், கல்யாணம் செய்து கொள்ளவும் விரும்புகிறார். முத்தழகின் திட்டத்தை அக்ஷ்ய் கமலின் தாய் மற்றும் தந்தைக்கு தெரிய வருகிறது. ஆனால், அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ‘முத்தழகு’ அக்ஷ்ய் கமலை காதலிக்க அனுமதிக்கின்றனர். பிரச்சனை எங்கிருந்து வருகிறதென்றால், முத்தழகின் பெற்றோரிடம் இருந்து வருகிறது. முத்தழகு, அக்ஷ்ய் கமலை காதலிப்பதை விரும்பாத அவர்கள், இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

  ஆனால், தன்னுடைய காதலில் முத்தழகு விடாப்பிடியாக இருக்கிறார். இதற்கிடையே நடைபெறும் காதல் போராட்டம் கதையாக இருக்கும் என முத்தழகு ராஷ்மிதா ரோஜா கூறியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நண்பகல் 1.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த தொடருக்கு தமிழ் ரசிகர்கள் அன்பையும், ஆதரவையும் கொடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தன்னுடைய கதாப்பாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முத்தழகு கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் ராஷ்மிதாவுக்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

  Also read... விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் கமலுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பகத் பாசில்!

  ராஷ்மிதா ரோஜா ஏற்கனவே ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என்ற தமிழ் சீரியலில் அறிமுகமாகி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சீரியலுக்கு முன்பாக பல கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். சயிந்தினியாக அபிராமி நடிக்கறார். அனு கதாப்பாத்திரத்தில் அனுராதா, கரண் சாகராக சந்தோஷ், சபிதா ஆனந்தாக தெய்வாணையும் நடிக்கின்றனர். இவர்களுடன் பூவிலங்கு மோகன் உள்ளிட்ட நடிகர்களும் ரெட்டை ரோஜாவில் நடிக்கின்றனர்.இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: