ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பீட்சாவை வைத்து அட்ராசிட்டி செய்த விஜய் டிவி பிரபலங்கள்.. ச்சீ என துப்பிய கிராமத்து இளைஞர்கள்!

பீட்சாவை வைத்து அட்ராசிட்டி செய்த விஜய் டிவி பிரபலங்கள்.. ச்சீ என துப்பிய கிராமத்து இளைஞர்கள்!

ஹுசைன் - மணிமேகலை

ஹுசைன் - மணிமேகலை

கிராமத்தில் இருப்பவர்கள் முதன் முறையாக பீட்சா சாப்பிட்டு, அதற்கு அவர்கள் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் தான் இந்த வீடியோவின் ஹைலைட் பார்ட்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவி பிரபலங்களான ஹுசைன் - மணிமேகலை தங்களுடைய யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்று பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

  மணிமேகலை - ஹுசைன் ஜோடிக்கு சமூகவலைத்தளத்தில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். இருவரும் சூப்பர் ஜோடி என புகழாத இணையவாசிகளே இல்லை எனலாம். மணிமேகலையை விஜேவாக சன் மியூசிக்கில் பார்த்த ரசிகர்கள் முதல் முறையாக அவரின் இன்னொரு முகத்தையும், காதல் திருமண கதை பற்றியும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 மூலம் கோமாளியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் மணிமேகலை. பலருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2 மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அது போலவே மணிமேகலையும் தன்னுடைய கேரியரில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றார்.

  இதையும் படிங்க.. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியே போவது யார்? வெளியான தகவல்!

  ஹுசைன் - மணிமேகலை இருவரும் சேர்ந்து லாக்டவுன் டைமில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினர். ஊரடங்கு காரணத்தினால் கிராமத்தில் மாட்டிக் கொண்ட இவர்கள் அங்கிருந்து பல வீடியோக்களை யூடியூப்பில் ரிலீஸ் செய்தனர். எல்லா வீடியோவும் லட்சக்கணக்கில் வியூஸ்களை அள்ளியது. இன்று அந்த யூடியூப் சேனலில் 1 மில்லியனை தாண்டி சப்ஸ்கிரைபர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

  இதையும் படிங்க.. சன் டிவி சீரியலுக்கு வரும் சூப்பர் ஸ்டார் பட நடிகை!

  மணிமேகலைக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக இருக்கும் கணவர் ஹுசைன் பயங்கர ஜாலியான கேரக்டர்.சமீபத்தில் இவர்கள் இருவரும் 2 புதிய கார்களை வங்கினர். இளம் தலைமுறைக்கு ஒரு ரோல் மாடலாக இவர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு இவர்களின் யூடியூப் சேனலில் ‘பீட்சா சேலஞ்ச்’ வீடியோ ஒன்று வெளியானது. அதாவது கிராமத்தில் இருப்பவர்கள் முதன் முறையாக பீட்சா சாப்பிட்டு, அதற்கு அவர்கள் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் தான் இந்த வீடியோவின் ஹைலைட் பார்ட்.

  ' isDesktop="true" id="653283" youtubeid="AG5kCKoVFhM" category="television">

  அதில், கிராமத்து பெண்கள் சிலர், “ச்சீ, கருமம், நாற்றம்” என பீட்சாவை காரி துப்புவது ஆடியன்ஸை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. பாத்ரூம் டூர், கிச்சன் டூர் என யோசிக்காமல் வித்தியாசமாக, அடிக்கடி கிராமத்து மக்களுடன் சேர்ந்து வீடியோ போடுவது தான் இவர்கள் வெற்றிக்கு காரணம் என்கின்றனர் ஹுசைன் - மணிமேகலை சேனலின் வியூவர்ஸ்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv, Youtube