ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எங்களின் மிகப் பெரிய தொடக்கம்... ஹேப்பி நியூஸ் சொன்ன ஹுசைன் - மணிமேகலை ஜோடி!

எங்களின் மிகப் பெரிய தொடக்கம்... ஹேப்பி நியூஸ் சொன்ன ஹுசைன் - மணிமேகலை ஜோடி!

மணிமேகலை - ஹுசைன்

மணிமேகலை - ஹுசைன்

ரசிகர்கள் தொடர்ந்து மணிமேகலை - ஹீசைனிடம் வீடு என்ன ஆனது என கேட்டுக் கொண்டிருந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பொதுவாகவே நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு, நடிகர் நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற ஆர்வம் எல்லோருக்குமே இருக்கும். அதிலும் விஜய் டிவி தொகுப்பாளர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். மற்ற எல்லா சேன்லகளை காட்டிலும் இந்த சேனலில் பணிபுரியும் ஆங்கர்களுக்கு அதிக சம்பளம் என்ற பேச்சு வலைத்தளத்தில் அடிக்கடி உலாவும். அந்த வகையில் விஜய் டிவியில் ஆங்கர் பிளஸ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளியாக வலம் வரும் விஜே மணிமேகலை அடிக்கடி கார் வாங்குவது, பைக் வாங்குவது என இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட அவரிடம் தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பும் கேள்வி உங்க சம்பளம் என்ன? என்பது தான். ஆனால் அதை இப்போது வரை  சீக்ரெட்டாக  வைத்திருக்கிறார் மணி.

கணவருக்காக ஆல்யா மானசா செய்த செயல்.. சஞ்சீவ் கொடுத்து வச்சவரு!

இப்படி இருக்கையில் சில மாதங்களுக்கு முன்பு 2 ஏக்கரில் நிலம் வாங்கி அதற்கு HM land என பெயர் வைத்து வீடியோ ஒன்றையும் யூடியூப்பில் வெளியிட்டார். கொரோனா லாக்டவுனில் மணிமேகலையும் ஹுசைனும் தங்கி இருந்த கிராமத்துக்கு அருகாமையில் தான் மணி இந்த நிலத்தை வாங்கி இருந்தார். ரியல் சூர்யவம்சம் ஜோடி போல் காதல் கல்யாணத்திற்கு பிறகு இருவரும் கடினமாக உழைத்து வீடு, நிலம் சேர்த்து வருகின்றனர்.

சத்யாவுடன் சேர துடிக்கும் வருண்.. வில்லியாக மாறி பிரிக்கும் ஸ்ருதி!

அந்த வகையில் மணிமேகலை நிலம் வாங்கியதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். ஆனால் அதன் பின்பு அந்த நிலம் என்ன ஆனது என தெரியவில்லை. எப்போது அதில் வீட்டு கட்டுவார்கள்? என்ற தகவலையும் மணி ஷேர் செய்யவில்லை. இப்படி இருக்கையில் ரசிகர்கள் தொடர்ந்து மணிமேகலை - ஹீசைனிடம் வீடு என்ன ஆனது என கேட்டுக் கொண்டிருந்தனர்.

' isDesktop="true" id="761449" youtubeid="f6qwR64uEmE" category="television">

இந்நிலையில், வாங்கிய நிலத்தில் முதன் முறையாக ஒரு நல்ல விஷயத்தை செய்து இருக்கிறார் மணி. சமீபத்தில் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணிக்காக போர் போட்டு தண்ணீர் எடுத்து இருக்கிறார்கள் மணியும் ஹூசைனும். இந்த வீடியோவை யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளனர். கல்யாணத்திற்கு பிறகு உழைத்து பணத்தை சேர்த்து அதில் நிலம் வாங்கி அந்த நிலத்தில் போர் போட்ட முதல் அனுபவத்தை பற்றி  நெகிழ்ச்சியுடன் இருவரும் பகிர்ந்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள், ரியல் சூர்யவம்சம் ஜோடிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை ஷேர் செய்து வருகின்றனர். கூடிய விரைவில் வீடு கட்டவும் ரசிகர்கள் இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Trending, Vijay tv, Youtube