Home /News /entertainment /

கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ’ஹாஸ்டல்’

கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ’ஹாஸ்டல்’

ஹாஸ்டல்

ஹாஸ்டல்

நகைச்சுவையும், திகிலும் கலந்த ஹாஸ்டல் திரைப்படத்தை கண்டு ரசிக்க வரும் ஞாயிறு, ஜுலை 24-ம் தேதி, பிற்பகல் 2.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலை தவறாமல் டியூன் செய்யுங்கள்.

  கலர் தமிழ் சேனலில் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக நகைச்சுவையும், மர்மமும் கலந்த ’ஹாஸ்டல்’ திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.

  நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை பிரியா பவானிசங்கர் நடித்திருக்கும் இத்திரைப்படம், மாணவர்களது விடுதியில் சிக்கிக்கொள்ளும் ஒரு இளம் பெண் மற்றும் அதையொட்டி நடைபெறும் மர்மமும், திகிலும் கலந்த பயங்கர நிகழ்வுகளை சுவாரஸ்யமாக எடுத்துக்காட்டுகிறது. ஜுலை 24, வரும் ஞாயிறு பிற்பகல் 2.00 மணிக்கு இத்திரைப்படத்தை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் சேனலை டியூன் செய்யுங்கள். திகிலுடன் வாய்விட்டு வயிறு புண்ணாகக்கூடிய அளவிற்கு சிரிக்கக்கூடிய காட்சிகளுக்கும் இதில் பஞ்சமில்லை.

  கலர்ஸ் தமிழின் ’மந்திர புன்னகை’.. எதிர்பார்ப்பை கூட்டும் புரமோ !

  சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஹாஸ்டல் திரைப்படத்தில் நடிகர் சதீஷ், டிகர் நாசர் மற்றும் நடிகர் முனீஷ்காந்த் ஆகியோரும் முக்கிய துணைத் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தங்களது விடுதி அறைகளில் ஒரு ஆவியுடன் அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் எதிர்கொள்கின்றன நிகழ்வுகளை இத்திரைப்படம் ரசிக்கும்படியாக சித்தரிக்கிறது. மிகவும் கண்டிப்பான விடுதி வார்டனின் பிடியிலிருந்து, அதே நேரத்தில் அவர்கள் தப்பிப்பது திரைக்கதைக்கு மேலும் சுவாரஸ்யத்தை சேர்த்து தருகிறது.

  முடிவுக்கு வந்த குஷ்புவின் ’மீரா’ சீரியல்.. கிளைமாக்ஸில் காத்திருக்கும் ட்விஸ்ட்!

  ஒழுங்கு கட்டுப்பாடுதான் முதன்மையானது என்று நம்புகின்ற ஹாஸ்டல் வார்டனான பாதிரியார் குரியாகோஸ் (நடிகர் நாசர் நடிப்பில்) இதே நம்பிக்கையை தனது பொறுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் வலியுறுத்தி கற்பிக்க முற்படுகிறார். அவரது கண்டிப்பான சர்வாதிகாரத்தனத்தை ஒருபோதும் மதிக்காதவராக கதிர் (அசோக் செல்வன் ) என்ற கல்லூரி மாணவரை ஹாஸ்டல் வார்டன் எதிர்கொள்ள நேரிடுகிறது.

  Hostel Movie ashok selvan priya bhavani shankar starrer An unimaginative remake tamil hostel premiere on colors tamil

  பணப் பிரச்சனைகளினால் கடும் சிரமப்படும் கதிர் ஒருநாள் அதிர்ஷ்டலட்சுமி (நடிகை பிரியா பவானி சங்கர் ) என்ற இளம் பெண்ணை சந்திக்கிறார். கல்லூரியில் ஆண் மாணவர்களுக்கான ஹாஸ்டலில் ஒரு நாள் இரவை செலவிட அனுமதிப்பதற்கு பதிலீடாக, கதிருக்கு பணத்தைத் தர அதிர்ஷ்டலட்சுமி முன்வருகிறாள். இதையொரு நியாயமான டீலாக கருதும் கதிர், தான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுகிறார். அந்த ஹாஸ்டலுக்குள் வருவதற்கு அதிர்ஷ்டலட்சுமி ஏன் விரும்புகிறார் மற்றும் அந்த விடுதி அமைவிடத்தில் என்ன மர்மங்கள் இருக்கிறது என்பதை கதையின் எஞ்சிய பகுதி நகைச்சுவையையும், திகிலையும் கலந்து சித்தரிக்கிறது.

  இத்திரைப்படத்தின் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக கூறியதாவது: “கலர்ஸ் தமிழ் போன்ற தமிழ் மக்களின் அபிமானம் மிக்க சேனலில் இத்திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியர் இடம் பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் பார்வையாளர்கள் அனைவருக்குமே சிறப்பான வார இறுதி நாட்கள் அமையுமென்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.” என்றார்.

  நடிகர் அசோக் செல்வன், ஹாஸ்டல் திரைப்படத்தின் தொலைக்காட்சி ப்ரீமியர் குறித்து பேசுகையில், “திகில் மற்றும் நகைச்சுவையின் நேர்த்தியான கலவையாக புதியதொரு விஷயத்தை கையிலெடுத்து அழகாக சித்தரிக்கும் ஒரு முயற்சியாக இத்திரைப்படம் இருக்கிறது. இந்த படத்தை  பார்க்கின்ற குடும்பத்தினர் அனைவருமே அவர்களது கவலைகளை மறந்து, ஜாலியாக ரசித்து மகிழ்வார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

  நகைச்சுவையும், திகிலும் கலந்த ஹாஸ்டல் திரைப்படத்தை கண்டு ரசிக்க வரும் ஞாயிறு, ஜுலை 24-ம் தேதி, பிற்பகல் 2.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலை தவறாமல் டியூன் செய்யுங்கள்.

  அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Priya Bhavani Shankar, Television

  அடுத்த செய்தி