தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகின்றன. காமெடி ஷோ, பல வித ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள் என வெரைட்டி வெரைட்டியாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக மக்களை தவறாமல் கவர்ந்து இழுத்து தக்க வைத்து கொண்டுள்ளவை சீரியல்கள் தான். வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை முதல் இரவு தூங்க போகும் நேரம் வரை சீரியல்கள் வரிசை கட்டி டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன.
சீரியல்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் வரை தமிழகத்தில் முன்னணி சேனலாக இருந்து வரும் சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகிய சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. சன் டிவி-யில் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி 2, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா, உள்ளிட்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி. தவிர காலை நேரத்தில் அத்திப்பூக்கள், உதிரிபூக்கள், நந்தினி, மற்றும் மெட்டிஒலி உள்ளிட்ட பழைய சீரியல்களும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப சன் டிவி-யில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன.
அதே போல ரசிகர்களின் அபிமானம் பெற்ற மற்றொரு பிரபல சேனலான ஸ்டார் விஜய் டிவி-யில் ரியாலிட்டி ஷோக்கள் எந்தளவிற்கு பிரபலமோ, அதே அளவிற்கு சீரியல்களும் பிரபலமாக இருக்கின்றன. சன் டிவி-யை போலவே விஜய் டிவி-யிலும் எண்ணற்ற சீரியல்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. காலை 9 மணி முதல் 1 மணி வரை முன்தினம் இரவு ஒளிப்பரப்பான சீரியல்களில் சில எபிசோட்கள் டெலிகாஸ்ட் செயயப்பட்டு வருகின்றன. காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே, செந்தூரப்பூவே, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 உள்ளிட்ட சீரியல்கள் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகின்றன.
சன் மற்றும் விஜய் டிவி-களில் தான் அதிக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால் TRP ரேட்டிங்கிலும் இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி இடம்பிடிக்கும். இதனிடையே சமீபத்திய TRP ரேட்டிங்கின்படி சன் மற்றும் விஜய் டிவி-யில் டாப் 5 இடங்களில் இருக்கும் சீரியல்களின் விவரங்கள் இதோ..
Also Read : நயன்தாரா விக்னேஷ் சிவன் வீட்டில் புதுவரவு - வைரலாகும் படங்கள்
சன் டிவி: கயல், வானத்தைப் போல, சுந்தரி, ரோஜா, கண்ணான கண்ணே
விஜய் டிவி: பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, தமிழும் சரஸ்வதியும்
Also Read : மாலத்தீவில் பிகினியில் மாஸ் காட்டும் நடிகை ரகுல் பிரீத் சிங்...
கயல் சீரியலில் கயலின் தங்கை திருமணத்தை ஒட்டிய பரபரப்பான எபிசோட்களும், பாக்கியலட்சுமியில் மனைவி பாக்கியாவிற்கே தெரியாமல் கோபி டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்கும் எபிசோட்களும் அதனையொட்டிய சம்பவங்களும் ரசிங்கர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sun TV, TRP Rating, TV Serial, Vijay tv