• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மகனின் முதலாம் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

மகனின் முதலாம் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

ஷாத்விக்

ஷாத்விக்

தங்களது மகனின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் ஹேமா ராஜ்குமார் மற்றும் சதீஷ் ஆகியோர், பெரிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அதில் காட்டப்பட்டு வரும் லட்சுமி அம்மாவின் இறப்பு தொடர்பான காட்சிகள் காரணமாக கடந்த சில நாட்களாக சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர். இருந்தாலும் அதில் நடிக்கும் நடிகர் பட்டாளத்தின் சமீபத்திய வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. காரணம் இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் சகோதரர்களில் ஒருவரான ஜீவா கேரக்டரின் மனைவியாக மீனா என்ற துடுக்கான பெண் ரோலில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாக திகழும் நடிகை ஹேமா ராஜ்குமாரின் வீட்டு விசேஷம் தான்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனா கேரக்டரில் நடித்து வரும் ஹேமாவு இன்ஸ்டா மற்றும் யூடியூபில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாவில் hemarajsathish_official என்ற அக்கவுண்ட்டை பயன்படுத்தி வரும் இவருக்கு 8 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களும், Hema's Diary என்று இவரது தனிப்பட்ட யூடியூப் சேனலுக்கு ஐந்தரை லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வருடம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பொதுவாக பிரபலமாக இருக்கும் பலரும் தங்கள் புதிய குழந்தையை பொதுவெளியில் அறிமுகப்படுத்தி விடுவார்கள். ஆனால் ஹேமா சமீபத்தில் தான் யூடியூப் வீடியோ மூலம் தன் மகன் ஷாத்விக்-ஐ ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தன் மகன் ஷாத்விக்கின் முதலாம் பிறந்த நாளை நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹேமா தனது ஆசை மகன் ஷாத்விக்கின் முதலாம் பிறந்த நாள் கோலாகல கொண்டாட்டங்கள் தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களை தன் சோஷியல் மீடியாக்களான இன்ஸ்டா மற்றும் யூடியூபில் ஷேர் செய்து இருக்கிறார். பிரபல ஜோடியான ஹேமா- சதீஷின் மகன் ஷாத்விக் சதீஷ் சமீபத்தில் ஒரு வயதை எட்டி உள்ளத்திற்கு ரசிகர்கள் மற்றும் சக சின்னத்திரை கலைஞர்கள் என பலர் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.




தங்களது மகனின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் ஹேமா ராஜ்குமார் மற்றும் சதீஷ் ஆகியோர், பெரிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விருந்தில் ஸ்ரீவித்யா சங்கர், சாந்தி வில்லியம்ஸ், சுமங்கலி, ஷீலா சிவா உள்ளிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான நடிகர்கள் பங்கேற்று ஷாத்விக்கிற்கு வாழ்த்துக்களுடன் பரிசு பொருட்களையும் வழங்கி மகிழ்வித்தனர்.

Also read... வாடிவாசலை தள்ளி வைத்துவிட்டு சிவா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா?

இதனிடையே நடிகை ஹேமா ராஜ்குமார் மற்றும் சதீஷ் ஆகியோர் தங்கள் மகனின் முதலாம் பிறந்த நாளையொட்டி ஸ்பெஷல் போட்டோஷூட் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட கண்கவர் போட்டோக்களையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களின் லைக்ஸ்களையும், வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார் நடிகை ஹேமா.




முன்னதாக "என் சிறிய உலகம், என் அழகிய இளவரசன் ஒரு வயதை எட்டி உள்ளான்.நீ என் வாழ்க்கையை அழகாக மாற்றினாய், என்னுள் இருக்கும் தாய்மையை வெளியே கொண்டு வந்தாய். லவ் யூ ஷாத்விக் சதீஷ்" என்று தனது மகனுக்கு இன்ஸ்டா மூலம் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார் நடிகை ஹேமா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: