• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிறந்தநாளுக்கு கேக் அனுப்பிய ரசிகர்கள் - இன்ஸ்டாவில் கண்கலங்கிய நடிகை!

பிறந்தநாளுக்கு கேக் அனுப்பிய ரசிகர்கள் - இன்ஸ்டாவில் கண்கலங்கிய நடிகை!

பாவம் கணேசன்

பாவம் கணேசன்

நடிகையாக மாறுவதற்கு முன்பு ஹாசினி ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியுள்ளார். டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் மேக்கப் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார்.

  • Share this:
பாவம் கணேசன் சீரியல் நடிகையான ஹாசினி, தனது பிறந்தநாளுக்கு கேக் அனுப்பிய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நவீன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் ‘சித்ரா’ கதாப்பாத்திரத்தில் நடிகை ஹாசினி நடித்து வருகிறார். அண்மையில், நண்பர்கள் புடைசூழ பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அந்த நாளில் அவருக்கு பல சர்பிரைஸ்கள் கிடைத்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ஹாசினிக்கு தனி ஃபேன் பேஜ் கூட இருக்கிறது. அதில் இருக்கும் ரசிகர் ஒருவர், ஹாசினிக்காக கேக் ஒன்றை பார்சல் செய்து அனுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



 




View this post on Instagram





 

A post shared by R.Karuna Vilasini (@haasiniofficial)






இதனைப் பார்த்த ஹாசினி நெகிழ்ச்சியடைந்துள்ளார். நண்பர்களுடன் இணைந்து அந்த கேக்குகளை வெட்டி மகிழ்ச்சியடைந்த அவர், தன் மீது அன்பு கொண்டிருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் மனதார நன்றியை தெரிவித்துள்ளார். ஹாசினி பிறந்தநாள் விழாவில் அவருடைய நண்பர்களான ஷிபு, உதய்பிரகாஷ், ஜெயின் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஹாசினி, நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் கண்ணீர்மல்க நன்றியை தெரிவித்துள்ளார்.

லைவ் வீடியோவில் பேசும்போது. " எனக்கு இவ்ளோ லவ் கிடைக்கும்னு எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் என் மீது காட்டும் அன்புக்கும், கொடுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி, Thank You So much, இதேபோல் எனக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்யுங்கள். உங்களுடைய ஆதரவால் தான், நான் அடுத்தடுத்த நிலைக்கு செல்கிறேன். விரைவில், என்னுடைய புராஜெக்டுகள் குறித்து கூறுகிறேன்" என ஆனந்த கண்ணீருடன் பேசியிருந்தார். நடிகையாக மட்டும்மல்லாமல் தொழில் முனைவோராகவும் ஹாசினி மாறியுள்ளார். அண்மையில் ஸ்டுடியோ ஒன்றை அவர் திறந்துள்ளார்.

Also read... கண்ணம்மா.. என்னம்மா இது... நடிகை ரோஷினி சேட்டை...!

நடிகையாக மாறுவதற்கு முன்பு ஹாசினி ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியுள்ளார். டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் மேக்கப் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார். இதுவரை சுமார் 100 படங்களுக்கும் மேல் டப்பிங் செய்துள்ளார். ஹாசினி குறித்து சுவாரஸ்யமான மற்றொரு தகவல் என்னவென்றால், அவர் இசைஞானி இளையராஜாவின் நெருங்கிய உறவினர். இளையராஜா தலைமையில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இது குறித்து அண்மையில் மனம் திறந்து பேசிய ஹாசினி, தன்னுடைய கணவர் கொடுமைக்காரர் என மனம் வருந்தி தெரிவித்திருந்தார்.

வீட்டில் அடிப்பது மட்டுமல்லாமல் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார், இதனால் அவரை விட்டு விலக முடிவு செய்துவிட்டேன் எனக் கூறினார். பாடகராக சினிமாத்துறையில் வலம் வர வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாக தெரிவித்த ஹாசினி, பாடல்கள் பாட கற்றுக்கொண்டாலும், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார். நடிகையாக மாறிய பிறகு, இப்போது முழு கவனமும் நடிப்பில் செலுத்தி வருகிறேன் என கூறும் அவர், சினிமாவிலும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: