மனைவி மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய கார்த்திக் சசிதரன்!

மனைவி மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய கார்த்திக் சசிதரன்

கணவர் கார்த்திக்கின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ள ப்ரியா, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுப்பு எட்டா" என குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "நீ தானே எந்தன் பொன்வசந்தம்" என்ற காதல் கதையை அடிப்படையாக கொண்ட சீரியல் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் தமிழ் திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் என்பவர் சூரிய பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் காதாநாயகனாக நடித்து வருகிறார். ரோஜாக்கூட்டம், இனிது இனிது காதல் இனிது, அடடா என்ன அழகு போன்ற பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஜெய் ஆகாஷ் முதல் முறையாக இந்த சீரியலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோடியாக தர்சனா அசோகன் என்ற புதுமுக நடிகை அனு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.

மேலும் கார்த்திக் சசிதரன் என்பவர் சந்திர பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யபிரகாஷின் இளைய சகோதரராக நடித்து வருகிறார். இந்த தொடரின் கதை 20 வயதான நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அனு என்ற பெண்ணும் 40 வயதான பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற தொழிலதிபருக்கு இடையில் எப்படி காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது என்ற கோணத்தில் கதை நகர்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



 




View this post on Instagram





 

A post shared by Priya Raja (@priyasweety2912)






இந்த நிலையில் "நீ தானே எந்தன் பொன்வசந்தம்" சீரியலில் நடித்து வரும் நடிகர் கார்த்திக் சசிதரன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாள் விழாவை தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். கார்த்திக் சசிதரன் தோழி நிவாஷினி திவ்யா தனது சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில், கார்த்திக்கின் மனைவி பிரியா ராஜா, நிவாஷினி மற்றும் புது புது அர்த்தங்கள் நடிகர் நியாஸ் கான், பார்வதி மற்றும் பலர் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளது தெரியவந்துள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by Nivashini Divya (@nivashinidivya)






பிறந்தநாள் வீடியோக்களை ஷேர் செய்துள்ள நிவாஷினி, #birthdaycakes #cutting #frankapannuvom #friendship #friendsforever #neethaneenponvasantham #pudhupudhuarthangal #nivashinidivya #nivashini_ma #combo (sic)” என்ற ஹேஷ்டேக்குகளில் ஷேர் செய்துள்ளார்.

Also read... பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்... ஏமி ஜாக்சனின் அசத்தல் ஆல்பம்!

நிவாஷினி கார்த்திக்கின் படத்தை ஷேர் செய்து, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தகப்பா @karthik_sasidharan_official என்ற அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டையும் டேக் செய்துள்ளார். மேலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Nivashini Divya (@nivashinidivya)






கணவர் கார்த்திக்கின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ள ப்ரியா, "பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுப்பு எட்டா" என குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டிற்கு கமெண்ட்ஸ் செய்துள்ள கார்த்திக்கின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

நீ தானே எந்தன் பொன்வசந்தம் சீரியலில் மட்டுமின்றி இதயத்தை திருதாதே சீரியலில் இளங்கோவாகவும், ராஜா ராணி சீரியலில் சஞ்சய்யாகவும், கான காணும் காலங்கள், தாயுமானவன், ஆண்டாள் அழகர் மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை போன்ற முக்கிய சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே மிஸ்டர் & மிஸர்ஸ் சின்னத்திரையில் தனது மனைவி பிரியாவுடன், கார்த்திக் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: