Kani - Baba Baskar: காரக்குழம்பு கனிக்கும் பாபா பாஸ்கருக்கும் இடையே நடந்த காரசார சண்டை

Kani - Baba Baskar: காரக்குழம்பு கனிக்கும் பாபா பாஸ்கருக்கும் இடையே நடந்த காரசார சண்டை

கனி - பாபா பாஸ்கர்

குக் வித் கோமாளி புகழ் கனி மற்றும் பாபா பாஸ்கர் இடையே வேறொரு நிகழ்ச்சியில் காரசாரமான விவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

  • Share this:
    குக் வித் கோமாளி புகழ் கனி மற்றும் பாபா பாஸ்கர் இடையே வேறொரு நிகழ்ச்சியில் காரசாரமான விவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 2-வது சீசன் சமீபத்தில் முடிந்தது. இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் ‘குக் வித் கோமாளி சீசன் 2’ டைட்டிலை கனி வென்றார். இவர் ஒரு காரக்குழம்பு ஸ்பெஷலிஸ்டும் கூட.



    தவிர, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஸ்வின் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இந்த சீசன் கனிக்கும், பாபா பாஸ்கருக்கும் இடையிலான சில வேடிக்கையான பக்கத்தைக் காட்டியது. அவர்கள் தங்களது அழகான சிறிய சண்டைகள் மற்றும் கிண்டல்கள் மூலம் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினார்கள். இப்போது, வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், கனிக்கும் - பாபா பாஸ்கருக்கும் இடையே ஒரு சூடான விவாதம் நடந்திருப்பது தெரிகிறது.

    செஃப் வெங்கடேஷ், அஸ்வின் மற்றும் கனி ஒருபுறமும், மறுபுறம் பாபா பாஸ்கர், மதுரை முத்து மற்றும் ஷகிலா ஆகியோர் அடங்கிய குக் வித் கோமாளி 2 அணி விஜய் டிவி-யின் ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளனர். அப்போது கனி, பாபா பாஸ்கரை கிண்டல் செய்கிறார். கோபமடைந்த மாஸ்டர் கோபத்தில் சத்தம் போடுகிறார். என்ன நடந்தது என்பதை நிகழ்ச்சியில் பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: