Home /News /entertainment /

12 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்ட பிரபல பாடகி சங்கீதா

12 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்ட பிரபல பாடகி சங்கீதா

ஹரியானா பாடகி சங்கீதா

ஹரியானா பாடகி சங்கீதா

சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு இந்த வழக்கு டெல்லி போலீசுக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காணாமல் போன ஹரியானா பாடகியின் உடல் 12 நாட்களுக்குப் பிறகு பைனி பைரோன் கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.

    டெல்லியில் வசிக்கும் பாடகி சங்கீதா என்ற திவ்யா. ஹரியானாவைச் சேர்ந்த இவர், ஹரியான்வி மொழி பாடகியாக அறியப்பட்டார். கடந்த மே 11-ம் தேதி சங்கீதாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து கடந்த 12 நாட்களாக போலீஸார் தீவிரமாக சங்கீதாவை தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஹரியானா மாநிலம் பைனி பைரன் கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்றுப் பார்த்த போலீசார், அது சங்கீதா தான் என்பதை உறுதி செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து கொலை மற்றும் ஆள் கடத்தல் தொடர்பான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹரியானாவை சேர்ந்த ரவி மற்றும் ரோகித் என்ற இருவரை கைது செய்தனர். மியூசிக் வீடியோ எடுப்பதாகக் கூறி, சங்கீதாவை வரவழைத்து அவரை திட்டமிட்டு கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு இந்த வழக்கு டெல்லி போலீசுக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கீதாவை கழுத்தை நெரித்துக் கொன்றது தெரிய வந்துள்ளதாகவும் ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

    திரையில் நெஞ்சுக்கு நீதியை பேசிய தமிழ் படங்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதுமட்டுமல்லாமல், ரோகித்துடன் சங்கீதா உணவு அருந்திய ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், சங்கீதாவின் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி