பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் ஆரம்பமே ஹன்சிகாவுடன் அசத்தலாக தொடங்கியிருக்கிறது. இது குறித்த விபரமான வீடியோவை தனது யூ-ட்யூப் சேனலில் பதிவிட்டுள்ளார் தனம் அண்ணியாக ரசிகர்களை கவர்ந்துள்ள சுஜிதா.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை, கண்ணன் - ஐஸ்வர்யா என நான்கு அண்ணன் தம்பிகளைப் பற்றிய கதையை மையப்படுத்தி இந்த சீரியல் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகளான தனம், தனது கொழுந்தனார்களுக்கு அம்மா ஸ்தானத்தில் இருந்து, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை விரும்புபவர்.
தனமாக நடித்து வரும் சுஜிதா, ஏற்கனவே குழந்தை நட்சத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் எனப்பல
படங்களில் நடித்துள்ளார். அதோடு எண்ணற்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். அதாவது
நடிகை ஹன்சிகா நடிப்பில் விளம்பர படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் சுஜிதா.
கையில் குழந்தை பக்கத்தில் அம்மா... வைரலாகும் விஜய்யின் சிறுவயது புகைப்படம்!
அதன் மேக்கிங் வீடியோவை தனது ’கதைகேளு கதைகேளு’ யூ-ட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதில் ஹன்சிகாவுடன் வேலைப் பார்த்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். விளம்பர பட இயக்குநரான தனது கணவர்
தனுஷின் மேற்பார்வையில் தான் ஏற்கனவே சில விளம்பரங்களை இயக்கியுள்ளதாகவும், ஆனால் ஹன்சிகாவை இயக்கியது இதுதான் முதல்முறை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் சுஜிதா.
அரோமா உணவுப் பொருட்களின் விளம்பரத்திற்காக 2 நாட்கள் ஹன்சிகாவுடன் படப்பிடிப்பில் இருந்ததாகவும், ஹன்சிகாவுக்கு சொல்லிக் கொடுப்பது ஈஸி. ஆனால் குழந்தைகளுடன் வேலை செய்தது ஃபன்னாக இருந்தது என்றும் கூறியுள்ள சுஜிதா, தான் பெற்ற அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது யூ-ட்யூபில் ட்ரெண்டில் உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.