நடிகர்களில் மிக சிலர் அவர்களின் வேடிக்கையான நடிப்பின் மூலம் மக்களின் மனதை கொள்ளை அடித்து விடுவார்கள். அந்த வகையில் நகைச்சுவை செய்ய கூடிய சில நடிகர்களை மக்கள் உடனே ஏற்று கொள்வார்கள். இதற்கு முக்கிய காரணம், அவர்களின் எல்லா வகையான நகைச்சுவைகளும் மக்களுடைய வாழ்வியலில் எளிதில் பொருந்தி போய்விடும். இதில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களின் வரிசையில் குண்டு கல்யாணம் அவர்களும் அடங்குவார். இவர் ஆரம்ப காலம் முதலே வேடிக்கையான கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வந்தார்.
இதன் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகள் இடைவெளி எடுத்து கொண்ட இவர் தற்போது மீண்டும் நடிக்க உள்ளார். அதுவும் சீரியலில் நடிக்க இருப்பதாக அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் ஒன்றான 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் தான் இவர் நடிக்க உள்ளார். தினம்தோறும் இந்த சீரியலில் பல திருப்பங்களை வைத்து வருகிறார் இதன் இயக்குனர். இதனாலேயே இந்த சீரியல் மிக சுவாரசியமாக உள்ளது. அதே போன்று இதற்கு அடுத்து என்ன கதை வரும் என்பதையும் மக்களால் கணிக்க முடியாத வண்ணம் இதன் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படி பல திருப்பங்கள் இருப்பதால் மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க.. டெலிகாஸ்ட் ஆன முதல் எபிசோடு சர்ச்சையில் சிக்கியது! குக் வித் கோமாளி சீசன் 3ல் என்ன நடந்தது?
சமீபத்தில் மாறன்-மாயன் இவர்கள் இருவரின் கதாபாத்திரத்தை வைத்து கதையை நகர்த்தி வந்தனர். இந்நிலையில் மாறன் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அடுத்து இதில் என்ன நடக்கும் என்று பலரும் எதிர் பார்த்து கொண்டிருக்க, மக்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளார் இந்த சீரியலின் இயக்குனர். ஆம், அடுத்தடுத்த காட்சிகளில் புது வரவாக குண்டு கல்யாணம் அவர்களை அறிமுகப்படுத்த உள்ளனர்.
இதையும் படிங்க.. ஜெண்டில்மேன் 2 இசைப்பாளர் யார்?
இதை அதிகார பூர்வ அறிவிப்பாக இந்த சீரியலின்
கதாநாயகனான செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதில் குண்டு கல்யாணம் அவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இது எல்லோரையும் ஆச்சரியப்படுத்துவதோடு, அளவு கடந்த மகிழ்ச்சியையும் தந்துள்ளது. குறிப்பாக சீரியல் ரசிகர்களுக்கு ஆனந்தத்தை தந்துள்ளது.
இந்த பதிவில், "'
நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் ஒரு சிறிய காட்சிக்காக நடிகர் குண்டு கல்யாணம் சாருடன் இணைந்து பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மாறன் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வேடிக்கையான எபிசோட்களை இந்த வார சீரியலில் மாலை 6.30 மணிக்கு @vijaytelevision-இல் பாருங்கள்" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த பதிவிற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் குண்டு கல்யாணம் மீண்டும் நடிக்க வந்ததை குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.