ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் செல்வதற்கு முன்பு ஜிபி முத்து செய்த காரியம்! வெளியானது வீடியோ

பிக் பாஸ் செல்வதற்கு முன்பு ஜிபி முத்து செய்த காரியம்! வெளியானது வீடியோ

ஜி.பி முத்து

ஜி.பி முத்து

பிக் பாஸ் சீசன் 6ல் ஆரம்பம் முதலே ஜிபி முத்துவுக்கு ஆடியன்ஸ் மத்தியில் பயங்கர வரவேற்பு.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு தனது நண்பர்களுக்கு பிரியாணி பார்ட்டி கொடுத்து விட்டு பிக் பாஸூக்கு கிளம்பி  சென்று இருக்கிறார் ஜிபி முத்து.

  விஜய் டிவியின் டி.ஆர்.பி மிஷினாக பார்க்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்கப்பட்டு 13 நாட்கள் கடந்து விட்டன. 21 போட்டியாளர்கள் தற்சமயம் வீட்டில் உள்ளன. இதில் இருந்து ஒருவர் இந்த வாரம் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார். ஞாயிற்றுக்கிழமையான நாளை  கமல்ஹாசன், பிக் பாஸ்  வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளரை அறிவிப்பார். மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ஆரம்பம் முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது.

  தாலி கழட்டி வச்சிட்டு நடிக்க மாட்டேன்.. சீரியல் நடிகையின் அதிரடி பதில்!

  தினம் தினம் வீட்டில் புது சண்டை, வார்த்தை போர்  வெடித்துக் கொண்டே செல்கிறது. நேற்றைய எபிசோடில் அசீம் vs ஆயிஷா vs விக்ரமன் சண்டை பரபரப்பை கூட்டியது. அசீம் வாடி போடி என பேச, ஆயிஷா செருப்பை கழட்ட கடைசியில் இருவரும் அண்ணன் - தங்கை என்று சமாதானம் ஆனது ஆடியன்ஸை எரிச்சலடைய வைத்தது. இதைப்பற்றி இந்த வாரம் கமல்ஹாசன் பேச வேண்டும் என்பது தான் ரசிகர்களின் கோரிக்கை. அதே போல் இந்த சீசனில் ஆரம்பம் முதலே  ஜிபி முத்துவுக்கு ஆடியன்ஸ் மத்தியில் பயங்கர வரவேற்பு.

  யூடியூப் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்துவிட்டு அதன் பின்பு பிக் பாஸ் சென்று இருக்கும் ஜிபி முத்து போன சீசன் தாமரையை நினைவுப்படுத்துகிறார். இந்நிலையில் பிக் பாஸ் செல்வதற்கு முன்பு கடைசியாக தனது நண்பர்களுக்கு ஜிபி முத்து பிரியாணி விருந்து வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது ஜிபி முத்துவின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

  தேவயானி மேடம் குழந்தை மாதிரி.. மேடை ஏறி ரகசியம் சொன்ன எஸ்.ஜே சூர்யா!

  ' isDesktop="true" id="823123" youtubeid="HhNV4CsWFgE" category="television">

  அந்த வீடியோவில் தனது கையால் நண்பர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறுகிறார் ஜிபி முத்து. பின்பு ரசிகர்களிடமும் நான் பிக் பாஸ் வீட்டுக்கு செல்கிறேன் எனக்கு உங்க ஆதரவு கட்டாயம் இருக்க வேண்டும் என கூறிவிட்டு வழக்கம் போல் தனது ஸ்டைலில் பேசி எல்லோருக்கும்  பாய் சொல்லிவிட்டு கிளம்புகிறார். ஜிபி முத்துவின் யூடியூப் சேனலில் இந்த வீடியோ லைக்ஸ்களை வாரி குவித்து வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv, Youtube