ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்ட பிக் பாஸ் ஜி.பி முத்து!

சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்ட பிக் பாஸ் ஜி.பி முத்து!

ஜிபி முத்து

ஜிபி முத்து

பதிலுக்கு சன்னி லியோனும் ஜி.பி‌. முத்துவுக்கு பால் கோவா ஊட்டினார். அதே போல நடிகை தர்ஷா குப்தாவுக்கு ஜி.பி. முத்து லட்டு ஊட்டினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  OMG பட பாடல் வெளியீட்டு விழாவில் பிக் பாஸ் புகழ் ஜிபி முத்து சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி விட்டு அவருடன் சேர்ந்து நடனனும் ஆடினார்.

  சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நேற்றும் மாலை OMG படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

  மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.  ஹாரர் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் லீட் ரோலில் நடித்துள்ளார். இயக்குனர் யுவன் இயக்கத்தில் ஒயிட் ஹவுஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

  மிகப் பெரிய சந்தோஷத்தில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஜோடி ராம் - ஜானு!

  இந்தப் படத்தில் தமிழ் ரசிகர்களை சன்னி லியோன் திகிலடைய வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். யூடியூப்பர் ஜிபி முத்து, சதீஷ், திலக், தர்ஷா குப்தா, விஜய் டிவி பிரபலங்கள் பாலா, தங்கத்துரை ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இந்நிலையில் பாடல் வெளியீட்டு விழாவில் சன்னி லியோன் கலந்து கொண்டார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிக் பாஸ் சீசன் 6 க்கு சென்று வந்த பின்பு ஜிபி முத்துவுக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் பெருகியுள்ளது.

  இந்நிலையில் நேற்றைய நிகழ்வில் மேடை ஏறி பேசினார் ஜிபி முத்து. அப்போது ” நான் சன்னி லியோன் புகைப்படங்களை பார்த்துதான் சன்னி யாரென்று தெரிந்துகொண்டேன்.இந்தப் படத்தில் சன்னி லியோனுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”  என்று கூறினார். ஜிபி முத்துவுடன் சன்னி லியோனும் மேடையை  பகிர்ந்து கொண்டார். அப்போது ஜி.பி. முத்து சன்னி லியோனுக்கு பால் கோவா ஊட்டி விட்டார். பதிலுக்கு சன்னி லியோனும் ஜி.பி‌. முத்துவுக்கு பால் கோவா ஊட்டினார். அதே போல நடிகை தர்ஷா குப்தாவுக்கு ஜி.பி. முத்து லட்டு ஊட்டினார். சன்னி லியோன் பால்கோவா போல் அழகாக இருப்பதாகவும் ஜிபி முத்து கூறினார். கடைசியாக ஜிபி முத்துவும் சன்னி லியோனும் மேடையில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 6, Vijay tv, Youtube