ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்த முறை விடக்கூடாது! ஜிபி முத்துவுக்கு வலை!? பக்கா ப்ளானில் பிக்பாஸ் 6!

இந்த முறை விடக்கூடாது! ஜிபி முத்துவுக்கு வலை!? பக்கா ப்ளானில் பிக்பாஸ் 6!

ஜிபி முத்து

ஜிபி முத்து

Bigg Boss Tamil 6 : பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் நபர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது. 6வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்கவுள்ளது. பிரம்மாண்ட செட்டுடன் புதுப்புது ரூல்ஸுடன் பிக்பாஸ் 6 தயாராகி வருகிறது. இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் நபர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. சின்னத்திரை, சோஷியல் மீடியா வைரல் நபர்கள் என பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் யார் என்ற ஆர்வம் தற்போதே சோஷியல் மீடியாவில் டாக்காக மாறிவருகிறது. அந்த வகையில் கடந்த பிக்பாஸில் பேசப்பட்டு கடைசியில் இல்லை என டாட்டா காட்டிய சோஷியல் மீடியா வைரல் நபரான ஜிபி முத்து இந்த முறை பிக்பாஸுக்கும் வருவார் எனக் கூறப்படுகிறது.

கடந்த பிக்பாஸ் 5ம் சீசனில் ஜிபி முத்து பங்கேற்பதாக தகவல்கள் வைரலாகின. பிக்பாஸ் செட் முன்பாக ஜிபி முத்து எடுத்த போட்டோவும் வைரலானது. ஆனால் பங்கேற்பாளர்கள் லிஸ்டில் ஜிபி முத்து இடம்பெறவில்லை. ரசிகர்கள் பலர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டாமென்று கூறியதால் தான் செல்லவில்லை என ஜிபி முத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வருடம் கண்டிப்பாக ஜிபி முத்துவை உள்ளே இழுத்துப்போட பிக்பாஸ் தீவிரமாக வேலைபார்த்து வருகிறதாம். தற்போது ஜிபி முத்து சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.


இதையும் வாசிக்க:  விஜய் சேதுபதி மனைவியாக நடித்தவருக்கு பிக் பாஸில் வாய்ப்பு?


பிக்பாஸ் ப்ளான்..

கடந்த பிக்பாஸ் 5 சீசனில் பங்கேற்பாளர்கள் பெரிய அளவில் மக்களிடையே ரீச் ஆகவில்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது. அதனால் 5வது சீசனை பெரிய அளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த முறை அந்த குற்றச்சாட்டை நிவர்த்தி செய்துவிட வேண்டுமென பிக்பாஸ் பக்கா ப்ளானில் உள்ளதாம் . முடிந்தவரை சோசியல் மீடியா, சீரியல் உலகில் வைரலாகி இருக்கும் நபர்களை தேடித்தேடி டிக் அடித்துள்ளார்கள் என்பது தகவல். அந்த வகையில் கண்டிப்பாக ஜிபி முத்துவை உள்ளே இழுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜிபி முத்து

ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தால் நிச்சயம் களைகட்டும் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில் மிகவும் இயல்பான நபரான ஜிபி முத்துவுக்கு பிக்பாஸ் வீடு செட்டாகாது என்பதால் அவர் வரமாட்டார் என அவரது ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 ஆயிஷா..

அதேபோல், சீரியல் நடிகை ஆயிஷா பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. போலீஸாக சத்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆயிஷாவின் நடிப்பிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

First published: