ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜி.பி முத்து காட்டுல அடை மழை.. விஜய் டிவி ஹிட் சீரியலில் என்ட்ரி?

ஜி.பி முத்து காட்டுல அடை மழை.. விஜய் டிவி ஹிட் சீரியலில் என்ட்ரி?

ஜிபி முத்து

ஜிபி முத்து

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜிபி முத்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிக் பாஸ் புகழ் ஜிபி முத்து அடுத்து விஜய் டிவி சீரியலில் நடிக்கிறாரா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. காரணம், விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் இருக்கும் புகைப்படம்  வெளியாகியுள்ளது.

    யூடியூப்பர் ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனைத்து தரப்பினரும் அறியும் முகமாக மாறிவிட்டார். யூடியூப்பராக வலம் வந்தவர் இன்று சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கி கொண்டிருக்கிறார். அவர் போகும் இடமெல்லாம் கூட்டம் குவிந்து வருகிறது. அதுமட்டுமில்லை சினிமா நிகழ்ச்சிகளை  தாண்டி கடை திறப்பு, கார்ப்ரேட் விழாக்களிலும் ஜிபி முத்து சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதாகவும் செய்திகள் உலா வருகின்றன. ஜிபி முத்து சன்னி லியோனுடன் இணைந்து நடித்திருக்கும் OMG திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதில் ஜிபி முத்து நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    உறவினருடன் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருக்கும் மைனா நந்தினி?

    பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் ஜிபி முத்து ஃபைனல்ஸ் வரை செல்வார் என ரசிகர்கள் நம்பினர் ஆனால் பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் ஜிபி முத்து பாதியிலே நிகழ்ச்சியை விட்டு விலகினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்துள்ளது.




     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)



    அதற்கு காரணம், நேற்றைய தினம் இணையத்தில் வெளியான புகைப்படம். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பட் ஹிட் சீரியலான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜிபி முத்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சொல்ல முடியாது இந்த சீரியலில் ஜிபி முத்து கெஸ்ட் ரோலில் நடிக்கலாம் என ரசிகர்கள் யூகித்துள்ளனர். ஆனால் இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்ப்பு வெளியாகவில்லை. அதன் பின்பே உண்மை என்ன? என்பது ரசிகர்களுக்கு தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 6, TV Serial, Vijay tv