ஜிபி முத்து தனது மனைவி, குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 6ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெயர் ஜிபி முத்து. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியான முதலே எதிர்பார்ப்பு கிளம்பியது. ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே முதல் வாரமே சிக்சர் அடிக்க தொடங்கினார் ஜிபி முத்து. அவரின் இயல்பான பேச்சும், பழக்கமும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் பிடித்து போனது. அனைவரிடமும் அவர் பழங்கிய விதமும் ஹவுஸ்மேட்ஸூக்கு பிடித்து போக எல்லோரும் அவரிடம் அன்பாக பழகி வந்தனர். இந்நிலையில் தான் ஜிபி முத்து தனது மகன் விஷ்ணுவுக்கு உடல்நலம் சரியில்லாததால் பிக் பாஸ் வீட்டை விட்டு பாதியிலே வெளியேறினார்.
குழந்தைகளுக்கு கமகம பிரியாணி! பிக்பாஸ்-ல் இருந்து வெளியே வந்து வீடியோ வெளியிட்ட ஜிபி முத்து!
பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த அவரிடம் கமலும் பேசி பார்த்தார். பணம், புகழ், வாய்ப்பு இதை எல்லாம் தாண்டி குழந்தைகள் தான் முக்கியம் என முடிவு எடுத்தவர் அனைவருக்கும் நன்றி, வணக்கம் கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு தன்னுடைய வீட்டுக்கு சென்று குழந்தைகளை பார்த்து அவர்களுக்கு ஆசையாக பிரியாணி வாங்கி கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார். அந்த வீடியோவையும் யூடியூப்பில் வெளியிட்டு இருந்தார்.
தற்போது ஜிபி முத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அவரின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். புது ட்ரெஸ், ஸ்வீட், பட்டாசு என ஜிபி முத்து வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டுகிறது. ரசிகர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை ஜிபி முத்து பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இன்றும் போல் என்றுமே ஜிபி முத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay tv, Youtube