ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

GP Muthu: முதல் நாளே ஜி.பி.முத்துவை சீண்டிய ராபர்ட் மாஸ்டர்... ஓடிச் சென்று கட்டியணைத்த அசீம், கதிரவன்!

GP Muthu: முதல் நாளே ஜி.பி.முத்துவை சீண்டிய ராபர்ட் மாஸ்டர்... ஓடிச் சென்று கட்டியணைத்த அசீம், கதிரவன்!

Bigg Boss Tamil 6 GP Muthu: பயந்து போன, ஜி.பி.முத்து கட்டிலில் இருந்து கீழே விழுந்து திருதிருவென முழிக்கிறார்.

Bigg Boss Tamil 6 GP Muthu: பயந்து போன, ஜி.பி.முத்து கட்டிலில் இருந்து கீழே விழுந்து திருதிருவென முழிக்கிறார்.

Bigg Boss Tamil 6 GP Muthu: பயந்து போன, ஜி.பி.முத்து கட்டிலில் இருந்து கீழே விழுந்து திருதிருவென முழிக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  GP Muthu Bigg Boss Tamil 6: கட்டிலில் படுத்திருந்த ஜி.பி.முத்துவை ராபர்ட் மாஸ்டர் சீண்டிய வீடியோ சமூக வலைதளங்களி வெளியாகி அவரது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்தியில் இருந்து முதன்` முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழுக்கு கொண்டு வந்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கிய பிக் பாஸ் முதல் சீசன் மக்களிடையே ரீச் ஆனது. இந்த பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ் வெற்றி வாகை சூடினார். அதனைத் தொடர்ந்து அடுத்தத்தடுத்த சீசன்கள் ஒளிப்பரப்பாகின. இதுவரை பிக் பாஸ் 5 சீசன்கள் டெலிகாஸ்ட் ஆகியுள்ளன. கடந்தாண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 5ல் ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்றார்.

  இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று மாலை தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா மகாலட்சுமி, மகேஸ்வரி சாணக்யன், வி.ஜே.கதிரவன், அசீம், சாந்தி மாஸ்டர், ஆயிஷா உள்ளிட்ட 20 பேர் போட்டியாளராகக் களமிறங்கியுள்ளனர்.

  டிக் டாக், யூடியூப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட வீடியோ தளங்களில் நன்கு அறிமுகமானவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாக மாறியுள்ளன. கடந்த சீசனிலேயே அவர் பிக் பாஸ் செல்வதாகக் கூறப்பட்டது. ஆனால் அது இந்த சீசனில் உண்மையாகியிருக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஜி.பி.முத்து முதல் ஜனனி வரை... பிக் பாஸ் 20 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

  இந்நிலையில் தலையோடு போர்த்திக் கொண்டு ஜி.பி.முத்து கட்டிலில் படுத்திருக்க, ராபர்ட் மாஸ்டர் மெல்ல அவரின் கால்களை நோண்டுகிறார். இதனால் பயந்து போன, ஜி.பி.முத்து கட்டிலில் இருந்து கீழே விழுந்து திருதிருவென முழிக்கிறார். இதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கிறார்கள். உடனே முத்துவை ஆசுவாசப்படுத்தும் நோக்கில், அசீமும், வி.ஜே.கதிரவனும் ஓடிச் சென்று அவரை கட்டியணைக்கிறார்கள்.

  இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஜி.பி.முத்து ஆர்மி, ’என்னடா பண்றீங்க தலைவரை?’ என கொந்தளித்துள்ளனர்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Bigg Boss Tamil 6