கொரோனா தொற்றுத் தடுப்பில் நடைமுறை சிக்கல்: டிவி சீரியல் ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல்

கொரோனா தொற்றுத் தடுப்பில் நடைமுறை சிக்கல்: டிவி சீரியல் ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல்
கோப்புப் படம்
  • Share this:
தமிழகத்தில்  சின்னத்திரை சீரியல்களுக்கான படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதி அளித்தாலும் உடனடியாக படப்பிடிப்பு நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த சுமார் 70 சீரியல்களின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஒரு படப்பிடிப்புக்கு 60 பேருடன் தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன்,படப்பிடிப்பை தொடங்கலாம் என்று தமிழக அரசு இன்று காலை அனுமதி அளித்தது.

சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற இடங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் சீரியல் படப்பிடிப்புகள் தொடங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் வரும் திங்கட்கிழமை முதல் படப்பிடிப்பை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார் சின்னத்திரை தயாரிப்பாளர் திருமதி. குஷ்பூ சுந்தர்.


பெஃப்சி, தொலைக்காட்சி நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் திங்கட்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகே இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

திருமதி.ராதிகா சரத்குமார் பேசும்போது, தொழிலாளர்கள் நடிகர்கள் ஆகியோரது பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து உரிய முடிவு எடுத்த பின்னரே படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்க துணைத்தலைவர் திரு.கவிதா பாரதி பேசும்போது, சீரியல் படப்பிடிப்பை நம்பி சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள்  இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே சென்னை மட்டுமல்லாது அடுத்தடுத்த இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு பல இடங்களில் அனுமதி வாங்குவது நடைமுறை சிக்கல் இருப்பதால் அதனை எளிதாக்கி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகையர் பலர் வெளிமாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்களை இங்கு அழைத்து வருவதிலும், அவர்களைத் தனிமைப்படுத்தி பாதுகாப்பாக படப்பிடிப்பு நடத்துவதிலும் சிக்கல் இருப்பதால் அடுத்த வாரம் ஷூட்டிங் நடப்பதற்கான சாத்தியங்கள் குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

Also read... கொரோனா வார்டில் மருத்துவர்களுக்கு உதவும் பிரத்யேக ரோபோ: அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைப்பு


Also see...
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading