60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த தமிழக அரசு அனுமதி

சின்னத்திரை படப்பிடிப்புகளை நாளை முதல் 60 பேருடன் நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த தமிழக அரசு அனுமதி
கோப்பு படம்
  • Share this:
ஊரடங்கு தளரவைத் தொடர்ந்து சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க கடந்த 21-ம் தேதி அனுமதியளிக்கப்பட்டது. அதிகபட்சமாக 20 நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் இருந்து வந்தது.

இதனால், படப்பிடிப்பில் பங்கேற்போரின் எண்ணிக்கையை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதனையேற்று, அதிகபட்சமாக 60 நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நாளை முதல் நடத்த அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் ஆட்சியர்களிடமும் அனுமதி பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை சின்னத்திரை கலைஞர்கள் வரவேற்றுள்ளனர்.

Also read... OTTயில் திரைப்படங்கள் வெளியிடப்படுவதை அரசால் தடுக்க முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
Also see...
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading