தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை அம்மாவை மீண்டும் கோபமடைய செய்கிறார் சரஸ்வதி. இதனால் வீட்டில் வில்லி சந்திரகலா எதிர்பார்த்தது போலவே சண்டை வெடிக்கிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக உள்ளது. இந்த சீரியல் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது என்றாலும் திரைக்கதையின் விறுவிறுப்பும் சுவாரசியமும் ரசிகர்களை விரும்பி பார்க்க தூண்டுகிறது. தமிழ் - சரஸ்வதி கல்யாணம் பிரம்மாண்டமாக முடிந்த நிலையில் கல்யாணம் முடிந்த கையோடு சரஸ்வதி 12வது கூட பாஸ் ஆகவில்லை என்ற உண்மை கோதை வீட்டுக்கு தெரிந்து விட்டது. இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் கோதைக்கு மாரடைப்பு வர, இதுதான் சரியான நேரம் என மொத்த குடும்பத்தையும் பிரித்தார் வில்லி சந்திரகலா.
இதையும் படிங்க.. முத்தழகுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பூமி செய்த துரோகம்!
ஆனால் பல பிரச்சனைகளுக்கு பிறகு, ஏகப்பட்ட பொய்களை கூறி மீண்டும் கோதை மனதில் இடம் பிடிக்க
சரஸ்வதி முயற்சி செய்து வருகிறார். தமிழ் உயிருக்கு ஆபத்து என்று சாமியார் சொன்ன பொய்யால், சரஸ்வதியை கிச்சனில் சமைக்க கோதை அனுமதி தந்தார். இதன் மூலம் சந்திரகலாவிடம் போட்ட சவாலில் சரஸ்வதி ஜெயித்தார். அதுமட்டுமில்லை கோதை கையால், சரஸ்வதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கும் நடந்து முடிந்தது.
இப்படி இருக்கையில்
, கோதை தன்னை மருமகளாக ஏற்றுக் கொண்டார் என சரஸ்வதி நினைத்து இன்றைய எபிசோடில் பூஜை அறையில் விளக்கு ஏற்ற ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் வீட்டுக்கு வரும் கோதை சரஸ்வதியிடம் மீண்டும் கோபத்தை காட்டுகிறார். வசு தான் விளக்கு ஏற்ற வேண்டும், பூஜை அறைக்குள் நீ போக கூடாது என்று சொல்கிறார். இதை கேட்டு மொத்த குடும்பமு ஷாக் ஆகுகிறார்கள்.
இதையும் படிங்க.. தெலுங்கு பக்கம் கரை ஒதுங்கிய பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ! என்ன காரணம்?
எல்லா பிரச்சனையும் முடிந்து விட்டது என நினைக்க, மீண்டும் கோதை வீட்டில் சண்டை வெடிக்கிறது. அதுமட்டுமில்லை தமிழை தோற்கடிக்க, கார்த்திக்கை தூண்டி விடுகிறார்
சந்திரகலா. 15 கோடி கார்த்திக்கிடம் கொடுத்து பிசினஸை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்படி அறிவுரை கூறுகிறார். இதை கார்த்திக் கோதையிடம் சொல்ல, ஆனால் தமிழ் இது சரியாக வராது என தடுக்கிறார். இதனால் கார்த்திக்கும் தமிழுக்கும் சண்டை வருகிறது. இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.