ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கொட்டும் மழையில் கோபிநாத் செய்த காரியம்... மனுஷன் பயந்துட்டாரு!

கொட்டும் மழையில் கோபிநாத் செய்த காரியம்... மனுஷன் பயந்துட்டாரு!

கோபிநாத்

கோபிநாத்

கொட்டும் மழையில் குடை பிடித்தப்படியே முதன் முதலாக முதலை கறியை ருசிப்பார்த்து இருக்கிறார் கோபி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவி ஆங்கர் கோபிநாத் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

  நீயா நானா ஷோவின் பில்லர் என்றால் அது கோபிநாத் தான். பல ஆண்டுகளாக  ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது அதற்கு ஆங்கராக இருப்பவர்  ஒருவர் மட்டும் தான்  என்பது சாதாரண சாதனை அல்ல. சின்னத்திரையில் இதுப்போல் நடப்பது அரிது. அதனை நிஜமாக்கி காட்டி இருக்கிறார் கோபிநாத்.இவருடைய பெயரே நீயா நானா கோபிநாத் என்று மாறுமளவுக்கு நீயா நானா நிகழ்ச்சியையும் கோபிநாத்தையும் பிரிக்க முடியாத அளவுக்கு மாறியுள்ளது.

  40 வயதில் ஆண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி சீரியல் நடிகை!

  காலத்திற்கு ஏற்றால் போல நிகழ்ச்சியின் தலைப்புகளும் நிகழ்ச்சியில் நடத்தும் விவாதங்களும் மேம்படுத்தப்பட்டு வருவது, சமூக அக்கறைகளை வெளிப்படுத்துவது என்று இந்த நிகழ்ச்சியில் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  நீயா நானா மூலம் அனைத்து இல்லங்களுக்கும் அறிமுகமானர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அணியும் ‘கோட்’ இவருக்கு புதிய அடைமொழியை அளித்தன. இந்த நிகழ்ச்சியில் ‘கோட்டு கோபிநாத்’ என்று அழைக்கப்பட்டு வருகிறார். மேடை பேச்சாளர், எழுத்தாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட கோபிநாத் தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி பெரிதாக வெளிப்படுத்தியதில்லை. இந்நிலையில் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்து சுற்றுலா சென்று இருக்கும் கோபிநாத் இதுக் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Gobinath (@gobinathsocial)  புலியுடன் மோட்டிவேஷ்னல் டாக், யானையுடன் குளியல் என கோபிநாத்தின் தாய்லாந்து சுற்றுலா வீடியோக்களுக்கு  ரசிகர்கள் லைக்ஸை வாரி வழங்கியுள்ளன. இந்நிலையில் கொட்டும் மழையில் குடை பிடித்தப்படியே முதன் முதலாக முதலை கறியை ருசிப்பார்த்து இருக்கிறார் கோபி. சாப்பிடுவதற்கு முன்பு பயந்து நடுங்கியவர் ஒருமுறை டேஸ்டை கண்டதும் சூப்பர், ஆஹா, ஓஹோன்னு புகழ்கிறார். இந்த வீடியோவை இன்ஸ்டாவிலும் கோபி வெளியிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Instagram, Vijay tv