Home /News /entertainment /

கோபி - ராதிகா திருமணத்தில் இனியா? பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

கோபி - ராதிகா திருமணத்தில் இனியா? பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவும் கல்யாணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கோபி - ராதிகா கல்யாணத்துக்கு இனியாவும் வந்தால் நன்றாக இருக்கும் என அடுத்த அதிர்ச்சியை கொடுக்கிறார் ராதிகா.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியல் இப்போது சூடுப்பிடித்துள்ளது. ராதிகா - கோபி கல்யாணம் உறுதியாகிவிட்டது. கோபி இத்தனை மாதங்களாக செய்து வந்த திருட்டு தனம் முடிவுக்கு வந்து விட்டது. ராதிகாவும் கல்யாணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். இதற்கான வேலைகளை ராதிகாவின் அண்ணன் பார்த்துக் கொள்கிறார். சாப்பாடு, அழைப்பிதழ் என இருவரின் இரண்டாவது திருமணம் மயூவின் ஆசைப்படி நடக்க போகிறது. கோபிக்கு சந்தோஷம் தாங்கல. கல்யாண வயதில் வீட்டில் மகனை வைத்துக் கொண்டு அவரே 2வது கல்யாணம் செய்கிறார்.

    இந்த விஷயம் பாக்கியா வீட்டில் யாருக்கும் தெரியாது. இந்த கல்யாணத்துக்கு சமைக்க போவதே பாக்கியா தான். ஏற்கெனவே கல்யாண ஆர்டர் கேட்டு தொழிலதிபர் ராஜ சேகர் நடத்திய நேர்காணலுக்கு பாக்கியா சென்று இருந்தார். அவர்கள் வைத்த போட்டியில் பாக்கியா ஜெயித்தும் விட்டார். ஆனாலும் பாக்கியாவை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை தர முடியாது என்பதால் ராஜ சேகர் அவருக்கு இன்னொரு டெஸ்ட் வைக்கிறார்.

    இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ஒரே படத்தில் அறிமுகமாகும் சீரியல் நடிகைகள்!

    அதாவது முதலில் பார்ட்டி ஹாலில் நடக்கும் சின்ன நிகழ்ச்சிக்கு  சமைத்து காட்டுங்கள் பிறகு அந்த ஆர்டரை பார்க்கலாம் என்கிறார். பாக்கியாவும் அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார். கடைசியில் அந்த பார்ட்டி ஹாலில் முதலில் நடக்கும் நிகழ்ச்சி கோபி, ராதிகாவின் திருமணம் தான். இதற்காக கோபியும், ராதிகாவின் அண்ணனும் அட்வான்ஸ் கொடுக்கிறார்கள். அதே போல் ராஜசேகரும் பாக்கியாவுக்கு ஃபோன் செய்து கல்யாணத்திற்கு சமைக்க தயார் ஆகுங்கள் என்கிறார்.

    அநீதி கண்டு பொங்கி எழும் கண்ணம்மா.. இந்த முறையும் பாரதி அவுட்!

    இதைவிட இன்னொரு ட்விஸ்ட், இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டுக்கு வரும் கோபி கல்யாண பத்திரிகையை பார்த்து செம்ம ஹேப்பி ஆகிறார். அதன் பின்பு கல்யாணத்துக்கு ட்ரெஸ் எடுப்பது பற்றி பேச்சு வருகிறது. உடனே ராதிகா, கோபியிடம் இனியாவுக்கும் ட்ரெஸ் எடுத்து கொடுங்கள். அதை நானே செலக்ட் செய்து தருகிறேன் என்கிறார். கோபிக்கு அதிர்ச்சி தாங்கல. அடுத்து இனியாவையும் கல்யாணத்துக்கு கூப்பிடுங்கள் என அடுத்த ட்விஸ்ட் வைக்கிறார் ராதிகா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி