பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அப்பா சீரியஸ் கண்டிஷனில் ஆஸ்பிட்டலில் உள்ளார். அப்பாவின் நிலையை கண்டு கோபி மனமுடைந்து அழுகிறார். இதனால் ராதிகாவுடனான உறவுக்கு இனிமேல் கோபி முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்புள்ளதா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் எபிசோடை பார்த்து வருகின்றனர்.
விஜய் டிவியில் பீக் டைமிங்கில் ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. இது ஒவ்வொரு இல்லத்தரசிகளின் கதை என ஒன்லைனுடன் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் பாக்கியாவாக நடிக்கும் நடிகை சுசித்ராவை ரசிகர்கள் தூக்கி கொண்டாடி வருகிறார்கள். அதே போல் அவரின் கணவர் கோபியாக நடிக்கும் சதிஷை திட்டி தீர்ப்பார்கள். மனைவியை ஏமாற்றி காதலியுடன் ஊர் சுற்றும் கணவர், பிள்ளைகளிடம் பொய் சொல்லிவிட்டு நல்லவராக நடிப்பது போல் கோபி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் வரும் கோபியை பூமர் அங்கிள் என்ற செல்ல பெயர் வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் அவ்வபோது கலாய்ப்பதும் வழக்கம்.
இதையும் படிங்க.. Bro Daddy review : சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க.. ப்ரோ டாடி விமர்சனம்!
தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே இந்த வார புரமோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, அந்த புரமோவில் கோபியின் அப்பா, கோபியுடன் சண்டைபோட்டு மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து விடுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்கின்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு பக்கவாதம் வந்து விட்டதால் இனி அவரால் பேசவோ , நடக்கவோ முடியாது என சொல்லி விடுகின்றனர்.
கோபி - ராதிகா திருமணம் பற்றி அவருக்கு தெரிந்து விட்ட நிலையில், சீரியலில் அடுத்தக்கட்ட ட்விஸ்டாக கோபியின் அப்பாவால் பேச முடியாமல் போனது கோபிக்கு பொன்னான நேரமாக மாறி விட்டது. இதனால் இனிமேல் கோபி வீட்டில் மாட்ட வாய்ப்பில்லை என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்றைய
எபிசோடில் அவருக்கும் கோபிக்கும் சண்டை வந்து, அவர் எல்லா உண்மைகளையும் வீட்டில் சொல்ல போகிறேன் என்று அவசர அவசரமாக படியில் இறங்கி வர அப்போது தான் அந்த விபத்து ஏற்படுகிறது. உடனே வீட்டில் இருக்கும் அனைவரும் அவரை ஆஸ்பிட்டல் அழைத்து செல்கின்றனர். கோபியின் அம்மா, கணவரை நினைத்து அழுகிறார். இனியா, எழில், செழியனும் ஒருபக்கம் கலங்கி நிற்கின்றனர்.மகள் போல் தாங்கிய பாக்கியாவும் வெடித்து அழுகிறார்.
இதையும் படிங்க.. சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் அபார வளர்ச்சிக்கு இதுவும் முக்கியமான காரணம்!
இவர்களை பார்க்கும் போது தன்னை அறியாமல் கோபியும் அழுது விடுகிறார். அப்பா மீது கோபிக்கும் பாசம் இருக்கிறது. இதனால் கோபியின் மனம் மாறுமா? ராதிகா உடனான திருமணம் குறித்த முடிவில் அவரின் முடிவு மாறுமா? என பல கேள்விகள் தற்போது எழுந்து வருகின்றன. அதுதான் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து முக்கிய கட்டமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கணித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.