Home /News /entertainment /

மீண்டும் ராதிகாவுடன் சேர நினைக்கும் கோபி.. பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன?

மீண்டும் ராதிகாவுடன் சேர நினைக்கும் கோபி.. பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன?

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியா மறுபடியும் வீட்டுக்கு  வந்தால்  ராதிகாவுடன் கோபி எப்படி சேர்வார்?

    பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் மீண்டும் ராதிகாவுடன் சேர நினைக்கிறார் கோபி. இதுக் குறித்து ராதிகா மகள்  மயூவிடம் ஃபோன் செய்து பேசுகிறார்  .

    பாக்கியலட்சுமி சீரியலில் இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் கோபி திருந்துவதாக இல்லை. ஒருபக்கம் மொத்த குடும்பமும் பாக்கியாவை நினைத்து அழுது கொண்டிருக்கின்றனர். ஈஸ்வரி அம்மா பாக்கியாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர பாக்கியாவை பார்க்க செல்கிறார். அவருடன் எழிலும் போகிறார். அதற்குள் இனியா பாக்கியாவுக்கு ஃபோன் செய்து பேசுகிறார். ஆனால் இனியாவிடமும் வீட்டுக்கு வர மாட்டேன் என்று பாக்கியா சொல்லி விடுகிறார்.

    பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போறாங்களாம்.. வெண்பா கொடுத்த அதிர்ச்சி!

    அப்போது  ராதிகாவின் மகள் மயூ கோபிக்கு ஃபோன் செய்கிறார். பதறி போய் ஃபோனை எடுக்கும் கோபி, ராதிகாவையும் உன்னையும் பார்க்க விரைவில் வருகிறேன் என்கிறார். அதாவது இந்த பிரச்சனைக்கு பிறகும் ராதிகாவை கோபி விடுவதாக இல்லை. மும்பை இல்லை எந்த நாட்டுக்கு சென்றாலும் உங்களை வந்து பார்ப்பேன், இந்த பிரச்சனை சரியாகி விடும் என கோபி சொல்கிறார். அதற்குள் ராதிகா வர, மயூ ஃபோனை கட் செய்து விடுகிறார்.

    இங்கே அம்மா பாக்கியாவை நினைத்து இனியா அழ, கோபி அவரை சமாதானம் செய்கிறார். ஆனால் இனியா மொத்த கோபத்தையும் கோபி மீது காட்டுகிறார். அவரால் தான் பாக்கியா இப்படி வீட்டை விட்டு சென்றார் என்று கோபியை திட்டுகிறார் . சமையல் குடோனில் இருக்கும் பாக்கியாவை ஈஸ்வரி அம்மா கவலையுடன் சென்று பார்க்கிறார். அதுமட்டுமில்லை வீட்டுக்கு வரும்படி கூப்பிடுகிறார்.

    அந்த நடிகருடன் காதல் வதந்தி.. இந்த நேரத்தில் ’ராஜா ராணி’ அர்ச்சனா போட்ட போஸ்ட்!

    பாக்கியா வரமாட்டேன் என்று பிடிவாதமாக  சொல்கிறார். ஆனாலும் ஈஸ்வரி அம்மா விடுவதாக இல்லை.பாக்கியாவை வர சொல்லி கெஞ்சுகிறார். கோபிக்காக அவரும்  மன்னிப்பு  கேட்கிறார். அடுத்து பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன? பாக்கியா மறுபடியும் வீட்டுக்கு  வந்தால்  ராதிகாவுடன் கோபி எப்படி சேர்வார்? இதுப்போன்ற பல கேள்விகளுக்கு வரும் எபிசோடில் பதில் கிடைக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி