பாக்கியலட்சுமி கோபி தான் இப்போதைய சின்னத்திரை ட்ரெண்டிங். தனது நெகடிவ் ரோலால் சீரியலின் டி.ஆர்.பியை எகிற வைத்துக் கொண்டிருக்கிறார் கோபி. பெயர் தான் பாக்கியலட்சுமி சீரியல் ஆனால் மொத்த கதையும் கோபியை சுற்றி தான். இந்த சீரியலை பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் கோபியை திட்டி தீர்க்கின்றனர். ஆனாலும் தான் ஏற்று நடிக்கும் ரோலை சிறப்பாக எடுத்து செல்கிறார் கோபியாக நடிக்கும் சதீஷ் குமார். இதற்கு முன்பு பல சீரியல்களில் படங்களில் சதீஷ் நடித்துள்ளர்.
COOK WITH COMALI : எனக்கு நடிக்க தெரியாது… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய்டிவி பிரபலம்!
ஆனால் பாக்கியலட்சுமி கோபி கதாபாத்திரம் அவரை புகழின் உச்சிக்கே எடுத்து சென்றுள்ளது. மனைவி பாக்கியலட்சுமியிடம் ஒரு மாதிரியான நடிப்பு, முன்னாள் காதலி
ராதிகாவிடம் ரொமான்டிக் ஆன முகம் என கோபியாக நடிக்கும் சதீஷ் குமாரை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். புரமோவில் கூட கோபிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை கவனிக்க முடிகிறது. மொத்தத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் டாப் கியரில் செல்வது பாக்கியலட்சுமி தொடர் தான்.
இதையும் படிங்க.. முத்தழகுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பூமி செய்த துரோகம்!
தற்போது கதைப்படி ராமமூர்த்தி தாத்தா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக மொத்த குடும்பமும், ஒன்றாக சேர்ந்துள்ளனர். இதற்கு ராதிகாவும் வருகிறார். மனிஷன் மாட்டிக்க கூடாதுன்னு ரூமில் மறைந்து கொள்கிறார். கோபி
ராதிகாவிடம் மாட்டிக் கொள்வாரா? சீரியலில் அடுத்து என்ன நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஒருபக்கம் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் கோபி பெருமாள் வேடத்தில் நடித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது, கோபி பெருமாள் வேடத்தில் சீரியல் அல்லது திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அந்த பழைய புகைப்படம் இப்போது நெட்டிசன்களிடம் மாட்டிக் கொண்டது. இதை அவர்கள் வைரலாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். கோபியா இது? என பலரும் ஆச்சரியத்தில் கேட்டுள்ளனர். சிலருக்கு இது பாக்கியலட்சுமி சீரியலில் வரப்போகும் எபிசோடு சீனாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதற்கு காரணம், மனிஷன் இன்னும் அப்படியே இளமை தோற்றத்துடன் இருப்பது தான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.