• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கோபியின் தகிடுதத்தம்... ராதிகாவை பார்த்து உண்மையை சொல்ல போகும் கோபி அப்பா!

கோபியின் தகிடுதத்தம்... ராதிகாவை பார்த்து உண்மையை சொல்ல போகும் கோபி அப்பா!

பாக்கியலட்சுமி கோபி

பாக்கியலட்சுமி கோபி

சத்தியமூர்த்தி எல்லா உண்மைகளையும் சொல்லி விடுவாரோ என்ற பயம் கோபிக்கு வந்து விடுகிறது.

  • Share this:
    பாக்கியாவை ஏமாற்றி கோபி இத்தனை நாட்களாக விளையாடி வந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கோபியின் அப்பா சத்தியமூர்த்தி.

    விஜய் டிவியில் ஒளிரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் திரைக்கதையில் பயங்கரமான ட்விஸ்ட். இயக்குனர் கதைக்களத்தை
    டாப் கியரில் பறக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மனைவி பாக்யாவுக்கு தெரியாமல், தன்னுடைய முன்னாள் காதலியான ராதிகாவுடன் இன்னும் ரொமானஸ் செய்து கொண்டிருக்கிறார் கோபி. ராதிகாவும், பாக்யாவும் தோழிகள். ஆனால், கோபி தான் பாக்யாவின் கணவர் என்று ராதிகாவுக்கு தெரியாது. ராதிகாவின் காதலன் கோபி என்பது பாக்யாவுக்கு தெரியாது. இப்படியே, பல எபிசோடுகள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. கோபி எப்போது மாட்டுவார்? என்று பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். அதில் முதல் படியாக தனது அப்பாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் கோபி.

    கோயிலில் வைத்து கோபி, ராதிகாவுக்கு பொட்டு வைப்பதை தனது இரண்டு கண்களால் சத்திய மூர்த்தி பார்த்துவிட அதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. சீரியல் டைரக்டர், கோபி இப்போது மாட்டிவிடுவார், அப்போது மாட்டிவிடுவார் என்கிற ரீதியிலேயே எபிசோடுகளை நகர்த்திக் கொண்டிருக்க, பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல் பெற்ற அப்பாவிடமே மாட்டிக் கொண்டார் கோபி.

    பாக்யலட்சுமி சீரியலின் கோபி கதாப்பாத்திரத்துக்கு வேற லெவலில் ஃபேன் பேஸ் உண்டு. இந்நிலையில் கோபியை ராதிகாவுடன் சேர்த்து பார்த்ததில் இருந்து சத்திய மூர்த்திக்கு தூக்கம் வரவில்லை. கோபியை கண்டிக்க வேண்டும் என முடிவு செய்தவர், கோபியை நைட் ரூமில் சென்று சந்திக்கிறார்.ராதிகாவுடன் சேர்ந்து கோபியை பார்த்ததையும், பாக்கியா மற்றும் பிள்ளைகளுக்கு ஏதாவது நடந்தால் உன்னை வெட்டி போட்டுருவேன் என்றும் கோபியை மிரட்டுகிறார். வழக்கம் போல் திருட்டு முழியில் முழிக்கிறார் கோபி. இதுக்குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லை, மறுநாள் ராதிகா வீட்டுக்கு பாக்கியா சாப்பாடு எடுத்து செல்கிறார்.



    பாக்கியாவை போக வேண்டாம் என சொல்லிவிட்டு, சத்திய மூர்த்தியே அந்த சாப்பாட்டை வாங்கி செல்கிறார். உடனே கோபிக்கு பயம் வந்து விடுகிறது. ஒருவேளை சத்தியமூர்த்தி எல்லா உண்மைகளையும் ராதிகாவிடம் சொல்லி விடுவாரோ என்ற பயம் கோபிக்கு வந்து விடுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது தான் கதையின் மிகப் பெரிய ட்விஸ்டே.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: