Home /News /entertainment /

எனக்கு எல்லாம் தெரியும்.. கோபிக்கு ஷாக் கொடுத்த பாக்கியா மகன் செழியன்!

எனக்கு எல்லாம் தெரியும்.. கோபிக்கு ஷாக் கொடுத்த பாக்கியா மகன் செழியன்!

பாக்கியலட்சுமி கோபி

பாக்கியலட்சுமி கோபி

கோபி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டார். அதுமட்டுமில்லை பொய் சொல்லி ஏமாற்றி பாக்கியாவை முதல் விசாரணைக்கு கோர்டுக்கு அழைத்து சென்று விட்டார்.

    பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மூத்த மகனால் கோபி அசிங்கப்படுத்தப்படுகிறார். செழியனா இப்படி? என ஷாக்கில் அப்படியே நிற்கிறார் கோபி.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மாட்ட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போதைக்கு அந்த ட்விஸ்டே இல்லை என்பது போல் இயக்குனர் கூலாக கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் தன்னை நம்பிய 2 பெண்களையும் ஈஸியாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் கோபி. இது தெரியாமல் ராதிகா ஒருபக்கம் காதல் காட்ட, பாக்கியாவோ பாசத்தை காட்டி கோபியை கையில் வைத்து தாங்குகின்றனர். கோபியின் இந்த பொய் நாடகத்தை யார் கண்டுப்பிடிப்பார்கள் என மொத்த சீரியல் ரசிகர்களும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    சமீபத்தில் கோபி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில்  கையெழுத்து வாங்கி விட்டார். அதுமட்டுமில்லை பொய் சொல்லி ஏமாற்றி பாக்கியாவை முதல் விசாரணைக்கு கோர்டுக்கு அழைத்து சென்று வந்து விட்டார். அடுத்து என்ன விவாகரத்து கிடைத்த உடனே கல்யாணம் தான் என்ற குஷியில் இருக்கிறார். ஆனால் அதற்குள் பணப்பிரச்சனையில் பாக்கியாவின் குடும்பமே இரண்டாகிவிடும் போல. கோபியின் அப்பா முடக்குவாதத்தால் பேச முடியாமல் இருக்கிறார். அவருக்கு இந்த நிலைமை ஏற்பட கோபி தான் காரணம். கோபியின் அப்பா இதுவரைக்கு இது குறித்த உண்மையை யாரிடமும் சொல்லவில்லை.ஆனால் அவருக்கான மருத்துவ செலவுகள் லட்சக்கணக்கில் ஆக இந்த சிக்கலில் இருந்த மீண்டு வர முடியாமல் அனைவரும் தத்தளிக்கின்றனர்.

    இதையும் படிங்க.. சரஸ்வதிக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி.. தமிழ் இப்படி செய்யலாமா?

    ஒருபக்கம் பாக்கியாவும் எப்படி எப்படியோ சமாளிக்கிறார். ஏற்கெனவே ஒருமுறை இந்த விஷயத்தால் சண்டை வர, கோபியின் அம்மா ஈஸ்வரி நகையெல்லாம் கொண்டு வந்து தந்து விடுகிறார். இப்படி இருக்கையில் பாக்கியா குடும்ப செலவை பார்த்துக் கொள்கிறார். எழிலும் முடிந்த வரை வீட்டுக்கு உதவி செய்கிறார். ஆனால் செழியன் சுயநலவாதிகாக ஒதுங்கி கொள்கிறார். இந்த நேரத்தில் தான் கோபிக்கு, அவசரமாக 1 லட்சம் தேவைப்படுகிறது. உரிமையுடன் சென்று மூத்த மகன் செழியனிடம் கேட்கிறார். ஆனால் அதற்கு செழியன் கொடுத்த பதிலால் கோபி ஷாக் ஆகுகிறார்.

    இதையும் படின்ம்க்க.. கலர்ஸ் தமிழின் ’இது சொல்ல மறந்த கதை சீரியல்’.. கணவனை இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை!

    ”வீட்டில் நடக்கும் செலவுகள் பற்றி எனக்கும் எல்லாம் தெரியும் அப்பா. தாத்தா மருத்துவ செலவுக்கு நிறைய செலவு பண்ணி இருக்கேன் என்கிட்ட இப்ப பணம் இல்லை” என்று மூஞ்சில் அடித்தது போல் பேச கோபி சோகமாக அங்கிருந்து கிளம்புகிறார். ஆனால் வழக்கம் போல் செழியனை ஜெனி திட்டுகிறார். ஆனால் செழியன் பணத்தை வைத்து கொண்டே தான் இல்லை என்றேன் என்ற உண்மையும் சொல்லி அதிர்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி