ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் பரிதாப நிலை!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் பரிதாப நிலை!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவும் பாக்கியாவும் எப்போது சந்தித்து பேசுவார்கள் என்பதற்கு தான் ரசிகர்கள் வெயிட்டிங்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டுக்கு போகும் கோபிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

  குடித்து விட்டு கோபி செய்த எந்த அட்டகாசங்களும் கோபிக்கு நினைவில் இல்லை. ராதிகாவிடம் பாக்கியாவின் ஃபோட்டோவை காட்டியதில் இருந்து, வீட்டுக்கு வந்து போதையில் பாக்கியா எனக்கு வேண்டாம் என புலம்பியது வரை எதுவுமே கோபிக்கு ஞாபகத்தில் இல்லை. இன்றைய எபிசோடில் காலையில் எழுந்த உடனே வழக்கம் போல் ராதிகாவுக்கு ஃபோன் செய்கிறார். ஆனால் ராதிகா ஃபோனை எடுக்கவில்லை. எழில் வந்து கோபியிடம் பேசுகிறார், அதற்கு அவரிடம் சாரி சொல்லிவிட்டு வேக வேகமாக ராதிகா வீட்டுக்கு கிளம்புகிறார் கோபி.

  மௌன ராகம் சீரியல் சக்தியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

  ராதிகா வீட்டு வாசலில் காரை நிறுத்தும் போது தான் நைட் குடித்து விட்டு ராதிகா வீட்டுக்கு போனது கோபிக்கு ஞாபகத்தில் வருகிறது. அப்போது கூட ராதிகாவிடம் பாக்கியா பற்றிய உண்மையை சொன்னது, ஃபோட்டோ காட்டியது என கோபிக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை. வழக்கம் போல் மயூவிடம் பேசுகிறார். அப்போது தான் ராதிகாவுக்கு கோபம் வருகிறது. ஆத்திரத்தில் கோபியை பார்த்து கத்துகிறார். வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். கோபி ஷாக்கில் நிற்கிறர்.

  ராதிகாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்பது கோபிக்கு தெரியாது. அதுமட்டுமில்லை. ராதிகாவின் கோபத்துக்கு என்ன காரணம் என்பதும் தெரியாமல் முழிக்கிறார். வீட்டில் இருக்கும் பாக்கியாவுக்கும், இவரை பற்றி தெரிந்து விட்டது . இதுவும் கோபிக்கு தெரியாது. இப்படியொரு பரிதாப நிலையில் இருக்கிறார் கோபி. இந்நிலையில், ராதிகாவும் பாக்கியாவும் எப்போது சந்தித்து பேசுவார்கள், இந்த பிரச்சனைக்கு எப்போது முடிவு கட்டுவார்கள்? என்பதற்கு தான் ரசிகர்கள் வெயிட்டிங்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv