Home /News /entertainment /

அப்பாவை பற்றி எனக்கு முன்பே தெரியும்.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த எழில்!

அப்பாவை பற்றி எனக்கு முன்பே தெரியும்.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த எழில்!

பாக்கியா - எழில்

பாக்கியா - எழில்

இன்றைய எபிசோடில் பாக்கியா, எழில், ராமமூர்த்தி தாத்தா மூவரும் சேர்ந்து கோபியை பிழிந்து எடுக்கின்றனர்.

    பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவுக்கு இன்னொரு அதிர்ச்சியை தருகி்றார் எழில். கோபி - ராதிகா உறவு பற்றி தனக்கு முன்பே தெரியும் என ஒத்துக் கொள்கிறார். இதை கேட்டு பாக்கியாவுக்கு அழுகை தாங்கல.

    ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ஏகப்பட்ட ட்விஸ்டுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பாக்கியா,  கோபி - ராதிகா  உறவை பற்றி குடும்பத்தாரிடம் சொல்கிறார். அதே போல் கோபியை கை நீட்டி கேள்வியும்  கேட்கிறார். பதில் இல்லாமல் முழிக்கிறார் கோபி. இத்துடன் எழிலும் இன்னொரு அதிர்ச்சியை தருகிறார். அதாவது அப்பாவுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது பற்றி தனக்கு முன்பே தெரியும் என்கிறார்.

    பாவ்னியை இப்படி மாற்றியதே அமீர் தான். உண்மையை போட்டுடைத்த பிக் பாஸ் பாவ்னியின் அக்கா!

    இதை கேட்டு கண்ணீரில் நனைகிறார் பாக்கியா. பாக்கியா இதை எதிர்பார்க்கவில்லை. கோபிக்கும் எழில் சொன்னது இடி விழுந்தது போல் இருக்கிறது. எழில் மட்டுமில்லை ராமமூர்த்தி தாத்தா, அதாவது கோபியின் அப்பாவும் எல்லா உண்மைகளையும் சொல்கிறார். கோபி விஷயம் தெரிந்த முதல் நபர் அவர் தான். மருமகள் மற்றும் குடும்ப நலனுக்காக இத்தனை நாளாக கோபியை பற்றி சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆனால் இப்போது எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்பதால்  அவரும் வாயை திறந்து பேசுகிறார்.

    பாரதி கண்ணம்மா அருண் பற்றி பரவும் அந்த தகவல் உண்மையா?

    ஆக மொத்தம் இன்றைய எபிசோடில் பாக்கியா, எழில், ராமமூர்த்தி தாத்தா மூவரும் சேர்ந்து கோபியை பிழிந்து எடுக்கின்றனர். இது எல்லாவற்றுக்கும் கோபி என்ன பதில் சொல்ல போகிறார் என்பது தான் ரசிகர்களுக்கு  இருக்கும் மிகப் பெரிய கேள்வி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி