Home /News /entertainment /

என் வாழ்க்கையில் என்ன தான் நடக்குது... கோபியிடம் கதறும் பாக்கியா!

என் வாழ்க்கையில் என்ன தான் நடக்குது... கோபியிடம் கதறும் பாக்கியா!

கோபி - பாக்கியா

கோபி - பாக்கியா

பாக்கியலட்சுமியில் கோபி மீது பாக்கியாவுக்கு சின்ன சந்தேகம் தான் இருந்தது. ஆனால் இப்போது அது உறுதியாகிவிட்டது.

    பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடுக்கான பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கோபியிடம் அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கிறார் பாக்கியா.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, ராதிகாவிடம் எல்லா உண்மைகளையும் கொட்டிய பின்பு ஒவ்வொரு நாளும் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு முன்பு எல்லா டைமும் ஈஸியாக எஸ்கேப் ஆன கோபி, கடைசியில் குடித்து விட்டு அவரே தனது வாயில் இருந்து எல்லா உண்மைகளையும் ராதிகாவிடம் சொல்லிவிட்டார். பாக்கியா தான் தன் மனைவி என்பதில் தொடங்கி, இனியா, எழில், செழியன் என மொத்த குடும்பத்தை பற்றியும்  கோபி சொல்லிவிட்டார். இதை ராதிகாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாக்கியாவுக்கு துரோகம் செய்ய கூடாது என எண்ணி, கோபியிடம் பேசுவதை தவிர்க்கிறார். இனிமேல் கோபியை வீட்டுக்கு வர வேண்டாம் என்றும் கூறுகிறார்.

    6 சீரியல்களில் நடித்து இருக்கும் பிரபல நடிகர்.. யாருன்னு கெஸ் பண்ண முடியுதா?

    ஆனால் கோபி, ராதிகாவை விடுவதாக இல்லை. பாக்கியாவிடம் டைவர்ஸ் வாங்கி கொண்டு கிளம்பி விடவேண்டும் என நினைக்கிறார், இந்நிலையில், ஊரில் இருந்து திரும்பி வரும் ராதிகாவின் அம்மா, கோபியை திருமணம் செய்து கொள்ளும்படி ராதிகாவை கட்டாயப்படுத்துகிறார். பாக்கியாவின் கணவராக இருந்தால் என்ன? கோபி உன்னை தானே விரும்புகிறார் என்றும் ராதிகாவை குழப்புகிறார். இதனால் சரியான முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார் ராதிகா.

    பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர்! அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?

    இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில், கோபியின் காரில் இருக்கும் ட்ரெஸ், அவரின் பர்ஸில் இருக்கும் பில் இதை எல்லாம் வைத்து கேள்வி கேட்கிறார் பாக்கியா. அதுமட்டுமில்லை இரவில் கோபி தனியாக சென்று டார்லிங், டியர் என பேசுவது, வீட்டுக்கு குடித்து விட்டு வருவது என கோபியின் நடவடிக்கையில் இருக்கும் மாற்றங்களை வைத்து கேள்விகளை அடுக்குகிறார்.



    கோபியால் பதில் சொல்ல முடியவில்லை, இதுவரை கோபி மீது பாக்கியாவுக்கு சின்ன சந்தேகம் தான் இருந்தது. ஆனால் இப்போது அது உறுதியாகிவிட்டது. தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது? என உண்மையை கோபியிடம் பாக்கியா கேட்கிறார். வழக்கம் போல் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார் கோபி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி