Home /News /entertainment /

கோபி கன்னத்தில் பளார் விட்ட ஈஸ்வரி அம்மா.. ஆடிப்போன பாக்கியா!

கோபி கன்னத்தில் பளார் விட்ட ஈஸ்வரி அம்மா.. ஆடிப்போன பாக்கியா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, ராதிகாவை சந்தித்து பேசுவாரா?

    பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியின் கன்னத்தில் அடித்து விடுகிறார் அவரின் அம்மா ஈஸ்வரி. இந்த பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் பொய், பித்தலாட்டம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. பாக்கியா , கோபி - ராதிகாவின் உறவை பற்றி தெரிந்து கொண்டார். ஆஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வரும் கோபியை நிக்க வைத்து கேள்வி கேட்கிறார் பாக்கியா. மொத்த குடும்பமும் பாக்கியா பக்கம் தான் நிற்கின்றனர். ஏற்கெனவே பாக்கியா வீட்டை விட்டு வெளியே போகும் புரமோ வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோவில் ஈஸ்வரி அம்மா கோபியை அடித்து விடுகிறார்.

    கல்யாணம் ஆன வெறும் 45 நாளில் சூப்பர் சிங்கர் அஜய் - ஜெஸ்ஸி எடுத்த அதிரடி முடிவு!

    கோபியை இதுவரையில் எந்த இடத்திலும் ஈஸ்வரி அம்மா விட்டுகொடுத்ததில்லை. பாக்கியா, கணவர் என எல்லோரிடமும் கோபிக்காக பேசுவார். ஆனால் இவ்வளவு பெரிய தப்பை கோபி செய்வார் என ஈஸ்வரி அம்மா எதிர்பார்க்கவில்லை. அந்த துக்கம், ஆத்திரத்தில் அவர் கோபியை அடித்து விடுகிறார். கோபியும் இதை எதிர்பார்க்கவில்லை. மகன்கள், மகள், மருமகள் முன்பு  அம்மா அடித்ததும்  உடைந்து போகிறார் கோபி.



    இந்த பரபரப்பான புரமோவை பார்த்த ரசிகர்கள் இன்று இரவு எபிசோடுக்காக ஆவலுடன் வெயிட்டிங். அதே போல் அடுத்து ராதிகாவின் கதை என்ன ஆகும். பாக்கியா, ராதிகாவை சந்தித்து பேசுவாரா? என்ற ஆர்வத்துடன்  ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கடந்த 2 வாரமாக பாக்கியலட்சுமி சீரியல், டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் கோபி மொத்த குடும்பத்திடமும் மாட்டிக் கொண்ட ட்விஸ்ட் தான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி