Home /News /entertainment /

உன் கல்யாணம் நடந்திடுமா? மகன் கோபிக்கு சவால் விட்ட ஈஸ்வரி அம்மா!

உன் கல்யாணம் நடந்திடுமா? மகன் கோபிக்கு சவால் விட்ட ஈஸ்வரி அம்மா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி அம்மா கோபியை திட்டி தீர்க்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா திருமணம் நடக்காது என சவால் விடுகிறார் கோபியின் அம்மா ஈஸ்வரி.

    பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து ராதிகா - கோபி திருமண எபிசோடுக்காக தான் ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களும் வெயிட்டிங். ஒருபக்கம் இதற்கான  வேலைகள் பரபரப்பாக நடக்கின்றன. சாப்பாடு, புது ட்ரெஸ், பார்ட்டி ஹால் என திருமண ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடக்கின்றன. கோபிக்கு சந்தோஷம் தாங்கல. ராதிகாவும் கோபி மேல் இருந்த கோபத்தை மறந்து விட்டார். இருவரும் திருமண நாளுக்காக காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் தான் இனியாவுக்கும் ட்ரெஸ் எடுத்து தர வேண்டும் என்கிறார் ராதிகா. கோபி ஷாக் ஆகிறார். இனியா கண்டிப்பாக இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது அவருக்கு தெரியும்.

    ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. சில்லுன்னு ஒரு காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 2 பிரபலங்கள்!

    ஆனால் அதே நேரம் தனது அம்மா ஈஸ்வரியை நம்புகிறார் கோபி . அவரிடம் திருமணம் பற்றி சொல்லி நேரில் கூப்பிட வேண்டும் என நினைக்கிறார். இதை ராதிகாவிடமும் சொல்கிறார். அதற்கு ராதிகா இதனால் திருமணத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று கோபியிடம் சொல்கிறார். இப்படி இருக்கையில் ஈஸ்வரி அம்மாவை , கோபி சந்தித்து பேசுகிறார். இதுக்குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.



    புரமோவில் கோபி, ஈஸ்வரி அம்மாவை கோவிலில் சந்திக்கிறார். அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பிறகு ராதிகாவுடன் திருமணம் என்ற விஷயத்தை சொல்கிறார். ஈஸ்வரி அம்மாவுக்கு கோபம் தாங்கல. எல்லோரும் கோபிக்கு அவர் சப்போர்ட் செய்வார் என்று தான் நினைத்தார்கள்.ஆனால் ஈஸ்வரி அம்மா கோபியை திட்டி தீர்க்கிறார். கடைசியில் என்னை மீறி இந்த கல்யாணம் நடந்திடுமா? என சவால் விடுகிறார். பயத்தில் கோபிக்கு எதுவும் புரியவில்லை. அவசரப்பட்டு விஷயத்தை சொல்லிவிட்டோமா? என பதறுகிறார். புரமோவில் வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி